பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 45 5 பக்தி என்றால் என்ன? நாரதபக்தி சூத்திரம் கூறும் பக்தி இலக்கணம் பக்தி என்றால் என்ன என்ற வினாவிற்கும் பூரணமான விடை தருதல் எளிதன்று. என்றாலும் நாரத பக்தி சூத்திரம், சாண்டில்ய பக்தி சூத்திரம் போன்ற நூல்கள் இவ்வினாவுக்கு ஒரளவு விடை கூற முயன்றுள்ளன. அவற்றிலிருந்து ஒரு சில பகுதி களைக் காண்பது பயனுடையதாகும். பக்தி என்பது இறைப் பொருளிடத்துக் கொள்ளப்படும் மிக உயர்ந்த அன்பாகும். பக்தி என்பது எல்லாத் தொழில்களையும் (பிரவிர்த்தி), ஒருமுகப்படுத்தி இறைவனுடைய பணியில் செலுத்துவதாகும் (19). இந்த பக்தி என்பது ஏனைய தர்ம, ஞான, யோகங்களைக் காட்டிலும் உயர்ந்ததாகும் (2.5). இத்தகைய தலையாய பக்தியை ஒருவன் பெறவேண்டுமாயின், பொறி உணர்வுக்கு இரையாக உள்ள இந்த உலகையும் அந்த உணர்வைத் துண்டும் பற்றையும் ஒரு சேர நீக்க வேண்டும் (35). பற்றிலிருந்து விடுதலை பெறுவததென்பது அன்பு நிறைந்த தொண்டை விடாமல் செய்வதனாலேயே பெற முடியும் (36). பக்தன் என்பவன் தன்னலத்தின் அடிப்படையில் எப் பணியிலும் ஈடுடாதவனாய், இரட்டைகள் எனப்படும் இன்பம் துன்பம் என்ற இரண்டிலிருந்தும் விடுபட்டவனாய் இருக்கிறான் (48). பக்தி, இன்னதுதான் என்று அறுதியிட்டு, ஆய்ந்து, இலக்கணம் கூறமுடியாத ஒன்றாகும் (51). பக்தன் உலகத் துன்பங்கள் என்பவற்றால் அல்லற்படுவதில்லை. காரணம் தன்னையே இறைவனுக்குச் சர்வபரித்யாகமாக ஒப்படைத்து விட்டமையாலேயே யாம் (61). பக்தியை அடையும்வழியை மேற்கொள்ளும் போதோ, முழு பக்தியை அடைந்துவிட்ட பிறகோகூட ஒருவன் உலக வாழ்க்கையை விட்டொழிக்க வேண்டிய தேவை இல்லை. அவன் செய்யும் பணிகள் அனைத்தும் இறைப் பணியாதலின் அதன் பலாபலன்களும் இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன (62). சித்தம்சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்' என்ற திருவாசகம் இங்கு நினைவுகூரத் தக்கது. பக்தர்கள் தம்முள் பேசிக்கொள்ளும்பொழுது தழுதழுத்த குரலுடனும், நீர் நிறைந்த கண்ணுடனும் புளகம் போர்த்த உடம்புடனும் உரையாடுவதால் அவர்கள் பிறந்த குடியை மட்டு மல்லாமல் அவர்கள் தோன்றிய நாட்டையும் தூய்மைப்படுத்து கின்றனர்(68). இறையன்பு அல்லது பக்தி என்பது ஒன்றேயாயினும் பின் கூறப்படும் 11 வழிகளில் வெளிப்படுகிறது. 31