பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 பெரியபுராணம் - ஒர் ஆய்வு 1. இறைவனின் கல்யாண குணங்களைப் பலபடியாகப் புகழ்தல் அவனுடைய முருகியல் அழகில் ஈடுபடுதல் அவனை வழிபடுவதில் இன்பங்காணல் ஓயாது அவனை நினைத்தல் தொண்டு செய்வதில் ஈடுபடுதல் இறைவனை நண்பனாகவே நினைத்தல் இறைவனைத் தந்தையாக நினைத்தல் இறைவனைக் கணவனாகவே நினைத்தல் இறைவனிடம் தன்னையே முழுவதுமாகத் தியாகம் செய்துவிடல் 10. அவனிடமே முழுவதுமாக அமிழ்ந்துவிடல் 11. அவனைப்பிரிய நேரிடின் அதற்காகப் பெரிதும் வருந்துதல் (82). நாரத பக்தி சூத்திரங்களில் சில சூத்திரங்களின் தமிழாக்கம் மேலே தரப் பெற்றுள்ளன. அடைப்புக்குள் இருக்கும் எண்கள் மூல சூத்திரங்க்ளின் எண்களாகும். வடமொழியில் கி.பி. 9ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய நூலாயினும் பக்தி பற்றிய த் தமிழர் கண்ட கருத்துக்களை மிக அழகாகவும் சுருக்கமாகவும் ந்நூல் எடுத்துக் கூறுவதாகக் கருதுவதில் தவறில்லை. இவற்றுள் சிலவற்றைப் பற்றி விரிவாகப் பின்னர் ஆராய்ந்து பெரியபுராண வரலாறுகட்கு இவை எவ்வாறு அரண் செய்கின்றன என்று காணலாம். - பக்தன் பிறருக்காக எதனையும், தன்னையேகூடத் தியாகம் செய்துவிடும் இயல்புடையவன் இவற்றின் அடிப்படையில் பக்தன் அல்லது தொண்டன் அல்லது இறையன்புடையான் யார் என்பதை ஒருவாறு சுருக்கிக் கூறமுடியும். தற்புகழ்ச்சி இன்மை, எளிமை, அகங்காரமின்மை, பிறருக்குத் தீங்கு செய்யாமை, அச்சமின்மை, உண்மையுடைமை, சினமின்மை, அனைவரிடமும் அன்புடைமை, உயிர்களிடத்து இரக்கமுடைமை, யாரிடத்தும் பகைமை பாராட்டாமை, ஆசையின்மை, பிறர் தனக்கிழைக்கும் தீமைகளைச் சகித்துக் கொள்ளும் தன்மை, நேர்ன்மயுடைமை, துணிவுடமை, பாலுணர்ச்சியில் அளவோடிருத்தல், பிறரை வெல்லாமை, பொருளைக் குவித்துவைக்கும் பற்றுள்ளம் இன்மை, உடலும்