பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 4 57 மனமும் தூய்மையாக இருக்கும் தன்மை என்பவற்றுடன் துறவு மனப்பான்மை உடைமை, வள்ளன்மை, சகிப்புத்தன்மை, போது மென்ற மனமுடைமை, நடுவுநிலைமை உடைமை, துன்பம் இன்பம் இரண்டினும் மனம் பேதுறாமை, புகழ், இகழ் இரண்டை யும் ஒன்றாகவே கருதி அதில் நெளியாமை, பகை என யாரையும் எதனையும் கருதாமை, உலக பந்தங்களில் கட்டுண்ணாமை, சாவு, வாழ்வு என்பவற்றைக் கண்டு மனம் நடுங்காமை என்பவை யும் பக்தர்களிடம் காணப்படும் பண்பாடுகளாகும். இப் பண்புகள் அனைத்தையும் சுருக்கி ஒரு வரியில் கூறவேண்டுமாயின் மணிமேகலை கூறும் தொடரை அப்படியே கூறிவிடலாம். பக்தன் அல்லது தொண்டன் என்பவன் ' தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' ஆவான். புறநானூறும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசுகிறது. இந்த உலகம் ஏன் நிலைத்து நிற்கிறது என்ற வினாவை எழுப்பிக் கொண்டு அதற்கு விடையாக 'தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே' என்று கூறிமுடிக்கிறது. பிறருடைய இன்பங்கண்டு மகிழ்வதும், அவர்கள் துன்பங் கண்ட பொழுது அதனைத் துடைக்க முயல் வதுந்தான் பக்தன் வாழ்க்கையில் காணப்பெறும் தனிப்பண் பாகும். 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று புறப்பாடல் கூறுவது இத்தகைய தொண்டர்களையேயாம் இதே கருத்தைப் பரஞ்சோதியார், 'ஊரெலாம் அட்ட சோறு நம்மதே உவரி சூழ்ந்த பாரெலாம் நமது பாயல்' " என்று பாடுகிறார். மனிதனாகப் பிறப்பெடுத்ததன் முக்கியக் குறிக்கோள், அனைத்துக்கும் மூலமான பரம் பொருளை அடைவதுதான் என்று ஞான, பக்தி, கர்மவழிச் செல்பவர் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் மனிதனுக்குப் பகுத்து அறியும் அறிவு தரப் பெற்றுள்ளது என்ற ஒரே காரணத்துக்காக அதனைப் பயன் படுத்தித்தான் ஆகவேண்டும் என்று கூறுவதும், சிந்தனையின் மூலமே பரம் பொருளை அறிந்து அடைய வேண்டும் என்று கூறுவதும் பொருத்தமற்ற வாதங்களாகும். இவ்வழியைக்