பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கையாளும் பொழுது அனைத்தையும் மித்தை என்று துறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மனிதனுக்குக் கொடுக்கப் பெற்றுள்ள அறிவைவிடச் சக்தி வாய்ந்த புலனுணர்வுகள், உணர்ச்சிகள் என்பவையும் உள்ளன. இவற்றை அறிவின் துணை கொண்டு ஆய்ந்து ஒரேயடியாக அடக்கி விடுதல் இயலாத காரியம். அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்; அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை " என்பது திருமூலர் வாக்கு. இவற்றை அறிவின் துணைகொண்டு அடக்கும் முயற்சியில் வாழ்நாள் முழுவதையும் செலவிடுவதைக் காட்டிலும் எளிதான பக்திவழி இதே பயனை அடைய உதவுகிறது என்றால் ஏன் அதனை மேற்கொள்ளக்கூடாது? மேலும் ஞானவழிச் செல்பவர் தாம் பிறந்து வளர்ந்த இந்த உலகத்தையும் அதில் வாழும் பிற உயிர்களையும் பற்றிக் கவலைப் படுவதே இல்லை. இந்த உலகமும், அதில் வாழும் பிற உயிர்களும் காட்டின அன்பினாலும் செய்த உதவியாலும்தானே ஞானி குழந்தையாகத் தோன்றி வளர்ந்து இன்றுள்ள நிலையை அடைந் துள்ளான்? இந்த உலகத்தை மாயை என்று துறந்துவிட்டுத் தன் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறும் ஞானி, தான் பிறந்து, வளர்ந்து, ஆளான இந்த உலகத்துக்கு சமூகத்துக்கு எத்தகைய கைமாற்றைச் செய்கிறான்? அவனைப் பொறுத்தவரை அவன் மேற்கொண்ட வழி நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அவனைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய இந்த உலகம் தான் செய்த உதவிகட்குக் கைம்மாறாக அவனிடம் எதிர்பார்க்கும் உதவிகளைச் செய்யாமல், இந்த உலகமே அஞ்ஞானத்தில் தோன்றிய மித்தை என்று சொல்பவனை என்ன என்று கூறும்? இத்தகைய ஞானத்தின் மூலம் மூலப் பரம் பொருளை அறிந்துகொள்ளும் அளவிற்கு உயர்ந்துவிட்ட அந்த ஞானி தன்னைத் தோற்றுவித்து வளர்த்த இந்த உலகிற்கு மீண்டும் வந்து இந்த உலகச் சூழலில் சிக்கித் தவிக்கும் பிற உயிர்கட்கு உதவ வேண்டும் என்றுதான் இவனைப் படைத்த உலகம் இவனிடம் எதிர்பார்க்கின்றது. தத்துவவாதி உலகம், சூழ்நிலை, பிற உயிர்கள் என்பவை பற்றிக் கவலை கொள்வதில்லை ஆனால் தத்துவ விசாரணை என்ற சூழலில் சிக்கி முன்னேற முயலும் தத்துவ ஞானி உலகம் எதிர் பார்க்கும் இச் செயலைச்