பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 45 9 செய்ய முன் வருவதில்லை! இன்னுங் கூறப்போனால் அது தன்னுடைய பணியன்று என்று அவன் ஒதுக்கி விடுகிறான். பிறருடைய சுகதுக்கங்கள் என்பவற்றில் ஊடாடிப் பங்கு கொள்வதுகூட மாயையில் சிக்குவதாகும். விருப்பு வெறுப்புக் களிலிருந்து விடுதலை பெற விரும்பும் தான்இந்த பந்தங்களில் சிக்குவது தகாது என்ற போலி வாதத்தால் அவன் தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறான். ஆனால் பக்தன் என்பவன் பிறருடைய துயரத்தைத் துடைப் பதற்காக எல்லாவற்றையும், ஏன்? தன்னையேகூட முழு விருப்பத் துடன் தியாகம் செய்யத் தயாராக உள்ளான். இதற்குரிய ஒரே காரணம் பக்தன் எந்தப் பரம் பொருளிடம் தன்னை அர்ப்பணித் துள்ளானோ அதே பரம்பொருளை உலகெங்கணும், எல்லா உயிர்களிடத்தும் காண்கிறான். எனவே பிற உயிர்கட்குத் தொண்டு செய்யும் பொழுது மகேசனுக்குச் செய்வதாகவே பக்தன் கருதுகிறான். 'நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின் படமாடக் கோயில் பரமற்கு அது ஆம் என்பதே பக்தனுடைய நினைவு. ஆண்டவனே மானிட சமுதாயம் முழுவதும் துயரக் கடலில் சூழ்ந்து கிடக்கும் இந்த நிலையில் நான் மட்டும் விடுதலை அடைய விரும்பவில்லை என்று பிரகலாதன் கூறுவதாக பாகவதம் பேசிச் செல்கிறது. இதே பாகவதம் பிறருக்குத் தொண்டு செய்வதைவிட உயர்ந்த சமயம் வேறு இல்லை என்றும் கூறுகிறது. ' இவற்றை எல்லாம் அல்லாமல் இன்னும் சில பயன்களும் பக்தியால் விளையக் காணலாம். தன்னைச் சுற்றியும் தன்னிட மும் ஏற்படுகின்ற எந்தக் குழப்பத்துக்கும் மனம் கலங்காமல் துயரம், துன்பம், ஏமாற்றம் என்பவைகளால் பாதிக்கப்படாமல் மட்டற்ற மகிழ்ச்சியோடும் இன்பத்தோடும் பக்தன் இருக்கக் காணலாம். இதற்கொரு காரணம் உண்டு. தாயின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கின்ற குழந்தை தன் தாயின் ஆற்றலில் கொண்ட நம்பிக்கை காரணமாக எவ்வித அச்சமுமின்றி ஆடிப் பாடிச் செல்வதைக் காண்கிறோம் அல்லவா? பக்தனும் இதே நிலையில்தான் உள்ளான். அவன் பக்தி செய்யும் பரம்பொருள் மாட்டு அவனுக்குள்ள தளரா நம்பிக்கையினாலும், அப்பொருள் எக்காரணத்தாலும், எக் காலத்திலும் தன்னைக் கைவிடாது என்ற உறுதிப்பாட்டினாலும் அவன் மகிழ்ச்சியுடனும் அமைதி யுடனும் வாழமுடிகிறது. பக்தன் உலகில் உள்ள உயிர்கள் அனைத்