பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு திலும் இறைவனையே காண்பதால் எவ்வகையான வேறுபாட் டையும் முரண்பாட்டையும் அவன் காண்பதில்லை. பக்தி ஒன்றுதான் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து அனைவருக் கும் விடுதலையின் வாசலைத் திறந்துவிடுகிறது. ஆன்மீக ஞானத்தை எளிமையாக்கி வேறுபாடில்லாமல் அனைவருக்கும் வழங்கும் இனிமையான புதுவழியைக் காட்டுவதும் அதுவே யாகும். ' நிறுவப்பெற்ற சமயங்கள் என்ற கூண்டுக்குள் பக்தர்களை அடைப்பது சரியன்று பக்தர்கள் அல்லது தொண்டர்கள் என்று எடுத்துப் பேசும் பொழுது இத்தகைய கூட்டத்தார் உலகில் எல்லாப் பகுதிகளிலும் எல்லாக் காலங்களிலும் இருப்பர் ஆவர் என்பதை மறத்த லாகாது. ஏக தெய்வம்பற்றிப் பேசும் இஸ்லாத்திலும் சூஃபிக் கள் எனப்படும் பக்தர்கள் உண்டு. எனவே இவர்களை, நிறுவப் பட்ட சமயம் (Established religion) என்ற கூட்டுக்குள் அடைக்க முடியாது. தனித்தனியான சிறு பிரிவுகள் அனைத்தையும் உடைத்தெறிந்து தொண்டர் கூட்டத்தை ஒன்று சேர்ப்பதே பக்தியின் வேலையாதலின் பல்வேறு மனித சட்டங்களை ஏற்படுத்தி அவற்றுள் மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கும் நிறுவப் பெற்ற சமயங்கள் பக்தர்களால் ஆதரிக்கப் பெறுவதில்லை. பக்தர்கள் இறையனுபவத்தில் பெறும் அனுபவம் எவ்வளவு உண்மையானது என்பதுபற்றி எப்.எச். பிராட்லி என்பார் சமய வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவத்தைவிட உண்மையானது வேறு எதுவும் இல்லை. பக்தி அனுபவத்தில் ஒருவன் உண்மைப் பொருளோடு தொடர்பு கொள்கிறான் என்பதை மறுப்பவன், தான் பேசுவது இன்னது என்று அறியாதவனாவான்' என்று கூறுகிறார். டாக்டர் வில்லியம் ப்ரெளன் என்ற மனவியல் மருத்துவர் 'மனவியல் மருத்துவன் என்ற முறையில் அல்லாமல், சாதாரண மனிதன் என்ற முறையிலும் கூற வேண்டுமாயின், நான் இதுவரை வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தில் உறுதிபெற்ற முடிபு யாதெனில் இறைப் பொருளுக்கும் தனி மனிதர்கட்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்று கூறுவது நம்பத் தகுந்த ஒன்றாகும். ' பக்தர்கள் பெறும் இறையனுபவம் பக்தர்கள் இறையனுபவத்தைப் பெறுவதற்கு அறிவின் துணைகொண்டு புறப்படுவதில்லை. மலைபோன்ற நம்பிக்கை