பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பன்னூறு ஆண்டுகள் இலக்கியம் நன்கு வளர்ந்திருத்தல் வேண்டும். இன்று நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண இலக்கியங்கள் தொல்காப்பியமும், சங்கப் பாடல்களுமாகும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பகுதி களைப் பெற்று விளங்குகிறது. 'இலக்கியங் கண்டதற்கே இலக்கணம் இயம்புவராதலின் தொல்காப்பியம் போன்ற எல்லா வகையிலும் நிறைவுடைய ஒர் இலக்கணம் தோன்ற வேண்டுமே யாயின் அதற்குமுன் இலக்கியங்கள் பல்கியிருந்திருத்தல் வேண்டும். தொல்காப்பியனாரும் தாம் கூறுபவை தாமே இட்டுக் கட்டிக் கூறியவை அல்ல என்பதை அறிவுறுத்துவான் வேண்டி, என்ப', 'மொழிப' என்றும், 'என்மனார் புலவர்' ' என்றும் பலவிடங்களிலும் குறித்துச் செல்கிறார். பன்னூறு ஆண்டுகள் இலக்கியம் நன்கு பயின்று வளர்ந்த நிலையிலேயே இலக்கணம் தோன்றுதல் மரபு. இன்றுள்ள சங்கப் பாடல்களை வைத்துத் தொல்காப்பியம் தோன்றவில்லை இன்று சங்கப் பாடல்கள் என்று நாம் குறிக்கும் பத்துப் பாட்டும், எட்டுத்தொகையும் தொல்காப்பியத் தோற்றத்துக்கு முன்னுதாரணங்களாக இருந்தன என்று கொள்ள இயலாது என்றால் அவ்விலக்கணம் தோன்றுதற்குப் பன்னுறு ஆண்டு களின் முன்னரே சங்கப் பாடல்களின் வேறாய தமிழ் இலக்கியம் பல்கிப் பெருகி, எழுத்திலும் இருந்திருத்தல் வேண்டும். எழுத்திலும் என்று கூறுவது ஒரு கருத்தை மனத்துட் கொண்டேயாம். வாய்மொழிப் பாடல்களாகவே தமிழ்க் கவிதைகள் இருந்திருப்பின் அந்த நிலையில் இலக்கணத்தில் எழுத்தும், சொல்லும் தோன்றக் காரணமில்லை. மேலும், தொல்காப்பியனார் எழுத்ததிகாரத்தின்