பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 46 l (Faith) என்பதன் துணையுடன் புறப்பட்டு அகவழியின் (Internal illumination) ஊடே புகுந்து சென்று இறுதியில் அனுபவத்தைப் பெறுகின்றனர். இந்நிலையில் அறிவு தன் இயலாமையை உணர்ந்துகொள்வதால் அதற்கு எவ்விதக் குறையும் இல்லை. இவ்வனுபவம் வளர்கின்ற முறை பக்தனுடைய அனுபவம் வளர்கின்ற முறையே அலாதியா னது. ஆன்மா என்பது பரம் பொருளின் ஒரு கூறாகும் என்றால், பரம்பொருள் யாண்டு நிறைந்திருக்கும் தன்மை பெற்றிருப்பது போல் இந்த ஆன்மாவும் அதில் ஒரு சிறு கூறைப் பெற்றிருக்கும். அவ்வாறானால் உள் பொருள் (Reality) என்பதன் பல்வேறு பகுதிகளோடும் ஆன்மா தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும். தருக்க முறையில் பார்த்தால் உள் பொருளுடன் தொடர்பு கொண்டுள்ள ஆன்மா, தேவை ஏற்படும் பொழுது நுண்மையான சூக்கும உலகையுங் கடந்து உள்பொருள்கட்கெல்லாம் மூலமாகிய பரம்பொருளுடன் தொடர்பு கொள்வதில் வியப்பில்லை. மின் ஆற்றல் உடைய இரண்டு முனைகள் சேர்ந்துவிடாமல் இடையே தடைப் பொருள் (Insulation) இருக்கிறது. இந்த இரு முனைகளும் ஒன்றை ஒன்று நெருங்குமானால் ஒரு குறிப்பிட்ட துரம் நெருங்கியவுடன் இடையே உள்ள தடையையும் தாண்டிக் கொண்டு மின் ஆற்றல் அதிகம் உள்ள முனையிலிருந்து குறைந் துள்ள முனைக்குப் பாய்கிறது. அதேபோல, ஆன்மா பரம் பொருளை நோக்கி நெருங்க நெருங்க இடையே உள்ள தடைப் பொருள்களாகிய உடம்பு, உலகம் என்ற அனைத்தையும் தாண்டிக் கொண்டு இறையருள் ஆன்மாவிடம் பாய்கிறது. இந்த மின் ஆற்றல் அதிகம் உள்ள முனையிலிருந்து குறைவாக உள்ள முனைக்கு பாயும்பொழுது ஒளியும் கூடவே உண்டாகிறது. இந்த இரண்டு முனைகளும் எவ்வளவு தூரம் நெருங்கினால் மின் பாய்ச்சல் ஏற்படும் என்று கூற முடியாது; அது மின் ஆற்றல்முனையின் நிறைவைப் பொறுத்தது. அதே போன்று பக்தர்கள் இறையனுபவத்தை நாடிச் செல்கையில் திடீரென்று அந்த அனுபவம் கிடைக்கிறது. மின் ஆற்றல் பாயும் பொழுது புறத்தே இருப்பவர்கள் அங்குத் தோன்றும் ஒளியைக் கொண்டுதான் அந்தப் பாய்ச்சலை அறியமுடியும். அதே போல இந்த பக்தர்கள் பெற்ற, பெறுகின்ற அனுபவத்தைப்புறத்தே உள்ளவர்கள் எவ்வாறு அறிய முடியும்? ஆம். பக்தர்களின் முகங் களில் தோன்றும் ஒளியாலும், அவர்களுடைய அமைதியடைந்து