பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 பெரியபுராணம் - ஓர் ஆய்வு விட்ட மனநிறைவை வெளிப்படுத்தும் அவர்களின் கண் ஒளி யாலுமே அவர்கள் இறையனுபவம் பெற்றவர்கள் என்பதை அறிய முடியும். தமிழ்ச் சமயச் சான்றோர் இந்த அனுபவத்தை ஒரளவு எடுத்து விளக்கிக் கூற முனைந்ததுண்டு இந்த அனுபவம் எத்தகையது என்று எடுத்து விளக்கிக் கூற முடியாதது என்று பெரியோர் கூறுவர். என்றாலும் மணிவாசகர் போன்றவர்கள் கூறுவதைக் கொண்டு ஒர் அளவு அறிய முற்பட லாம். ‘...... ஐம்புலன்கள் ஆர வந்து எனை ஆட்கொண்டு 'உள்ளே புகுந்த விச்சை மால் அமுதப் பெருங்கடலே! மலையே! உன்னைத் தந்தனை... ' 'வாக்கிறந்து, அமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை குரம்பை தோறும், நாயுடல் அகத்தே குரம்பு கொண்டு இன்தேன் பாய்த்தி(னன்); நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள், எற்புத் துளைதொறும் ஏற்றினன்' 16 என்பன போன்ற பாடல்கள் இவர்கள் பெறும் வாக்கிறந்த அனு பவத்தை ஒரளவு வாக்கினால் கூற முற்பட்ட பகுதிகளாம். 'பக்தி என்பது சமய வாழ்வின் சாரமாகவும் அதன் தனிப்பட்ட பகுதியாகவும் உள்ளது. வேறு எல்லாவித உறவு களையும் மனமானது மறந்துவிட்டு இறைவனுக்கும் ஆன்மா வுக்கும் ಥಿಸ್ತ್ರ உள்ள உறவு ஒன்றை மட்டுமே அவாவி நிற்ப தாகும்' என்று கேயார்ட் (CARD) என்பார் கூறும் இதே கருத் தைத்தான் சேக்கிழார், 'ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருத்து சாத்துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங்கூத்தின்