பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 46 3 வந்தபேர் இன்பவெள்ளத்துட் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். ' என்று பாடுகிறார். இன்னுஞ் சற்று விரிவாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் நாவரசர்

  • * * * * * * 'அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை, தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள், தலைப்பட்டாள் நங்கை தலைவன். தாளே ' என்று பாடுகிறார். பக்தர்களின் தனித்துவம் மாறிவிடுகிறது பக்தர்களும் நம்மைப் போலவே உண்டு, உடுத்து, பேசி வாழக் காண்கிறோம். அப்படியானால் அவர்கட்கும் நமக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையா? சேய்போல் இருக்கும் இவர்கட் கும் பொறி புலன்கள் உண்டு. உலகில் நம்மைப் போலவே பிறரொடு பழகி வாழ்கிறார்கள். இவர்களை அடையாளங் கண்டு கொள்வது எவ்வாறு? என்ற வினாவிற்கு இந்நாட்டார் தக்க முறையில் விடை கூறியுள்ளனர். நம்மைப் போல் கருவி கரணங்களைப் பெற்றிருப்பினும் இவர்களுடைய கருவி கரணங் களைப் பசு கரணங்கள் என்று கூறாமல் பதி கரணங்கள் என்று கூறுவர். நம்முடையவை பசுகரணங்கள் எனப்பெறும். இக் கருத்தை மேனாட்டறிஞரான மிடில்டன் மர்ரே என்பார் பின் வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது. இயேசு நாதர் மிஸ்டிக்' எனப்படும் பக்தரா? என்ற வினாவை எழுப்பி ஆராய்ந்தால் இறுதி யாக நாசரத்வாசியாகிய இயேசு போன்ற மாபெரும் பக்தருக்கு மனிதனுக்குரிய கருவி கரணங்கள் அனைத்தும் முற்றிலும் புதிய கருவி கரணங்களாக மாறிவிட்டன " என்று கூறலாம் என்பது அவர் கூற்று. பதி கரணங்கள் என்று இந்நாட்டவர் கூறும் சொற்கள் அவருக்குப் பழக்கமில்லையாதலின் புதிய கருவி கரணங்களாக மாறிவிட்டன என்கிறார் அப்பெரியார். இத்தகைய அடியவர் செய்யும் செயல்களைச் சாதாரண மனிதர்கள் செய்யும் செயல்களாக இந்நாட்டார் கருதுவதில்லை. சித்தம் சிவமாக்கி செய்தனவே தவமாக்கும் அத்தன் ' என்பது மற்றொரு பக்தர் கூற்றாகும்.