பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 64 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'என்னை முற்றும் உயிருண்டுஎன் மாய ஆக்கை இதனுள்புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்றமாய அம்மான்' 'அமலங்கள் ஆக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி' என்று நம்மாழ்வார் கூறுவதும் இக்கருத்தை வலியுறுத்தும். இவர்களுடைய கருவி கரணங்கள் பதி கரணங்களாக மாறி விட்டமையின் இவர்கள் சொல் செயல் அனைத்துமே இறைவ னால் சொல்லவும் செய்யவும் படுவனவாகும் என்று இந்நாட்டார் கூறினர். திருஞான சம்பந்தர் 'ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே! 23, என்றும், மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசிலாச்சீர் மறைக்காடு, நெய்த்தானம், நிலையினான் எனது உரை தனது உரையாக நீறணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்." என்றும் பாடுவது இதுவரைக் கூறப்பெற்ற விளக்கத்தின்படிப் பார்த்தால் முற்றிலும் பொருத்தமேயாகும். "என்றைக்கும் என்னை உய்யக் கொண்டுபோகிய அன்றைக்கன்று என்னைத்தன் ஆக்கி என்னால்தன்னை இன்றமிழ் பாடிய ஈசனை.... 25 என்பது நம்மாழ்வார் வாக்கு. என்னைத் தன்னாக்கி என்று ஆழ்வார் கூறுவதால் பசுகரணங்கள் மாறிவிட்டமையை அறிகி றோம். நாரத பக்தி சூத்திரங்கட்கு உரையும் விளக்கமும் எழுதி வெயியிட்ட சுவாமி தியாகீசாநந்தா இரண்டாம் சூத்திரத்தின் அடிப்படையில் தரும் விளக்கம் இங்குக் கூறிய கருத்துக்கு அரண் செய்வதாகும். அதன் தமிழாக்கம் வருமாறு: ' 'பக்தர்கள், தெய்வீக ஆற்றல் பெற்றவர்கள் என்பவர்களுள் பலர், முற்றிலுமாக இறையருளில் கலந்துவிட விரும்பாமல் தம்முடைய தனித்துவத்தை ஒரு சிறிது வைத்துக் கொண்டுள் ளார்கள். இதன் காரணம் ஒன்றுண்டு. இந்தத் தனித்துவம் இருந்தால்தான் இறை இன்பத்தை அனுபவிக்க முடியும்.