பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 4 6 5 சர்க்கரையாகவே மாறிவிடுவதைக் காட்டிலும் சர்க்கரையை ருசிப்பது நலம் பயக்கும் என இவர்கள் எண்ணுகின்றனர். இன்னுஞ் சிலர் தாம் பிறந்த இந்த உலகில் உள்ள பிற உயிர்கட்கு உதவவேண்டும் என்று கருதுவதால் இந்தத் தனித்துவத்தை வைத்துக் கொண்டுள்ளனர். மூன்றாவது வகையினர் தனித் துவத்தை வைத்திருப்பது, அதையும் கரைத்துவிடுவது என்பது பற்றிக் கவலைப்படாமல் இறைவனிடம் தம்மை முழுவதுமாக சரணமாகத் தந்துவிடுகின்றனர். அவ்வாறு தந்துவிட்டுத் தமக் கென்று ஒன்றும் இல்லாமல் இருப்பதால் இறைவன் தம்மை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என இவர்கள் கருதுகின்றனர். இந்த மூன்று வகையினரைப் பொறுத்தமட்டில் ஒன்று மட்டும் உறுதியாகும். இந்த மூன்று வகையில் எந்த வகையில் நிற்பவராயினும் அவர்களுடைய தனித்துவம் (Individuality) என்பது பக்தாரக ஆவதற்கு முன்னர் இருந்ததுபோல் ஆனபிறகு இருப்பதில்லை. நம்போன்ற சாதாரண மக்களைப் போல அவர்கள் காட்சியளிப்பது ஒரு வேடமேயாகும். அவர்களுடைய சொல், செயல் என்ற அனைத்தின் மூலமாகவும் இறைவன்தான் செயல்படுகிறான். இவற்றிலிருந்து ஒன்றை நாம் தெரிந்துகொள்ளலாம். இரண் டாவது சூத்திரத்தில் நாரதர் குறிப்பிடும் பக்தி என்பது நாம் அன்றாடம் குறிப்பிட்டுப் பேசும் சாதாரண தெய்வபக்தி என்பத னின்றும் வேறுபட்டது என்பதை அறிதல் வேண்டும். அவர் கூறும் பக்தி என்பது எல்லா யோக மார்க்கங்களின் முடிவாகும். இறைவனை அடையக் கூறப்பெற்ற பல்வேறு வழிகளின் முடிவாகும். இந்த இறையன்பில் 'நான் என்பதற்கு இடமே இல்லை. இதன் விளைவு எல்லா உயிர்களிலும் இறைவனையே காண்பதும், தான் அது என்ற வேறுபாட்டை அறவே மறந்து விடுவதும் ஆகும். இதன் பயன் இறைவனுக்கும் அவனுடைய படைப்புகளாகிய பிற உயிர்கட்கும் தன்னலக் கலப்பில்லாத தொண்டு செய்வதே. இதுவே வழிபாடு எனப்படும்.' சுவாமி தியாகீசர் இந்த நூலின் இரண்டாம் சூத்திரத்தில் தந்துள்ள இந்த விளக்கம் இதுவரை நாம் கூறிவந்தவற்றிற்கு அரணாக உள்ளது. காட்டபெற்ற மேற்கோள்கள் முதலிய வற்றிலிருந்து மேனாட்டார், வடநாட்டார், பிற சமயவாதிகள் ஆகிய அனைவரும் பக்தியைப் பற்றி ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருத்தலைக் காணமுடிகிறது. பக்தர்கள் என்றும், தொண்டர்கள் என்றும், அடியார்கள், பாகவதர்கள் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் இவர்