பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 & 6 பெரியபுராணம் - ஒர் ஆய்வு கள் தத்துவ வாதிகள் செய்யமுடியாத ஒன்றையும் செய்ய வல்லவர்கள். அதுவே எதிர்காலத்தை அறிதலாகும். தத்துவ வாதியைப் பொறுத்தமட்டில் அவன் சுருதி, யுக்தி, அனுமானம் என்பவற்றின் உதவியால் தருக்க முறையில் ஆராய்ந்து எதிர்காலம் இவ்வாறு இருக்கும் என்று கணிப்பான். ஆனால் அது அப்படியே இருக்கும் என்று கூறமுடியாது. உள்ளுணர்வு (Intution) தெய்வீக ஆற்றல் என்ற இரண்டையும் நிரம்பப் பெற்றுள்ள பக்தன் மிக எளிதாக இதனைச் செய்கிறான். பக்தன் துணைக் கொள்ளும் உள்ளுணர்வு தெய்வீக ஆற்றலை நாடி நிற்பது. தெய்வம் கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்ததாகலின் பக்தனுக்கும் இதனைச் செய்யமுடிகிறது. பக்தர்கள் எல்லாச் சமயங்களிலும், எல்லாக் காலத்திலும், எல்லா நாட்டிலும் உளர் என்று முன்னர் கூறப் பெற்றதல்லவா? காலம், தேசம், நடைமுறை (வர்த்தமானம்) என்பவற்றால் பிரிக்கப்பட்டு நிற்கும் இவர்களிடை ஒற்றுமை இருக்குமா என்ற ஐயம் ஏற்படுதல் நியாயமானதே யாகும். அறிவு ஒன்றையே துணைக்கொண்டு நிற்கும் தத்துவவாதிகளிடையேயும், விஞ்ஞானி களிடையேயும் மாறுபாடுகள் நிரம்ப இருக்கும். அறிவு வளரும் இயல்புடையது ஆகலானும் ஒரே மனிதனிடங்கூட அவன் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவும் வளர்கின்றமையாலும் இதன் பயனாகக் காணப்படும் கருத்துக்களில் மாறுபாடுகளும் வேறுபாடு களும் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இதன் எதிராகப் பக்தர்களைப் பொறுத்தமட்டில் இவர்களுள் காணப்பெறும் ஒற்றுமை வியப்பைத் தரும். அவரவர்கள் பேசும் மொழி காரண மாக இறைவனுக்கு வெவ்வேறு பெயர்களை இட்டு அழைப்பர். இது தவிர அன்பு, சத்தியம், பிற உயிர்கட்குத் தொண்டு செய்தல் முதலான மதிப்பீடுகளில் (Values) இவர்களிடையே எவ்வித வேறுபாடும் இல்லை. ஏதோ ஒரு இலக்கை அடைவதற்குச் சாதனமாக இந்த மதிப்பீடுகளை இந்தப் பக்தர்கள் கொள்ள வில்லை. அதற்குப் பதிலாக இவற்றை நடைமுறை உள் பொரு ளாகவே (Reality) கருதினர். எனவேதான் இவர்களிடை வேறு பாட்டைக் காணமுடிவதில்லை. காலம், இடம், மொழி, நாகரிகம், இவை எல்லாவற்றாலும் வேறுபட்டிருப்பினும் இவர் கள் அனைவரும் இறைபக்தியில் ஒன்றாகவே இருந்தமையின் பிற உயிர்கட்குத் தொண்டு செய்வதிலும் ஒருமைப்பாட்டைக் காட்டினர். மேலும், உலகிடை உள்ள சாதாரண மக்கள் மிகவும் உயர்வாகக் கருதி அடைய முயலும் செல்வம், புகழ், அதிகாரம், சுகவாழ்வு என்பவற்றை இவர்கள் ஒரு பொருட்டாகவே கருத - மிகப் பழைய புறநானூறு கூறும்,