பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கால, தேச, வர்த்தமானம் கடந்து இருப்பவர்கள் பக்தர்கள் இதுவரை இந்த நாட்டிலும் வடநாட்டிலும் பக்தர்கள் பற்றியும், பக்திபற்றியும் இருந்துவந்த கருத்துக்கள் ஒருவாறு திரட்டிக் கூறப் பெற்றன. இவை அனைத்தையும் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் தெளிவாக அறிந்திருந்தார். அத்தெளிவு காரணமாகவே பல்வேறுபட்ட இயல்புகளும், செயல் களும், நடைமுறைகளும், வாழ்க்கை முறைகளும் உடைய நாயன் மார்களின் வாழ்க்கையின் உள்ளே உள்ள ஒருமைப்பாட்டை அவரால் அறிய முடிந்தது. சாதாரண மனிதர்களாக இருப்பின் இந்த 63 நாயன்மார்களுடைய வரலாறுகளை ஒருமுறை பார்த்தாலும் இவற்றுள் எவ்விதமான ஒற்றுமையும் இல்லை என்ற முடிவுக்குத்தான் வருவர். எவ்வளவுதான் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் இவர்கள் அனைவரை யும் வரிசைப்படுத்திக் கூறியிருப்பினும் தனித்தனியாக நோக் கினால் ஒன்று சேர்க்க முடியாத உதிரி வரலாறுகள் என்றுதான் தோன்றும். அப்படியானால் எந்த அடிப்படையில் இந்த உதிரி வரலாறுகளை ஒன்று சேர்த்து ஒரு காப்பிய வடிவம் தருவது? என்ற வினாத் தோன்றத் தானே செய்யும். ஒரு வரலாற்றுக்கும் அடுத்த வரலாற்றுக்கும் இணைப்பாகக் கூறுவதற்கு எதுவும் இல்லை. இத்தனை இக்கட்டுகளுடன் கூடிய இந்த வரலாறுகளில் என்ன ஒற்றுமையை காணமுடியும்? சிவனடியார்கள் என்ற பொதுத் தன்மையைக் கூறலாமெனின் சிவனடியார்கள் என்பவர் கட்கு இலக்கணம் வகுக்கவேண்டும். சிவவேடம் தாங்கியவர்கள் அனைவருமே சிவனடியார்கள் என்று கூறிவிடவும் முடியாது. மெய்ப்பொருளைக் கொன்ற முத்தநாதன், ஏனாதிநாதரைக் கொன்றவன் ஆகிய இருவரும் சிவவேடந் தாங்கியவர்களே யாவர். எனவே சிவவேடந் தாங்கியவர்கள் அனைவருமே சிவனடியார்கள் என்று கூறிவிடமுடியாது. மிகச் சிறந்த அடியார் களாகிய ஆனாயர், திருநாளைப்போவார், சாக்கியர் என்பவர் கள் சிவவேடந் தாங்கியவர்கள் என்றுங் கூற இடமில்லை. எனவே வெறும் சிவவேடம் இவர்களுக்குள் பொதுத்தன்மை என்று கூறவும் முடியாது. - திருக்கூட்டச் சிறப்புப் பாடியதன் உள்நோக்கம் யாது? இந்த இடர்ப்பாட்டை நன்கறிந்த சேக்கிழார் இத்தொண்டர் ப் பொதுவான இலக்கணம் வகுக்கின்றன்ர். அவர் வகுக்கும் இலக்கணங்களுள் சிவவேடமும் இடம் பெற்றிருப்பினும் அதைவிட முக்கியமான சில இலக்கணங்களையும் திருக்கூட்டச் சிறப்பு என்ற பகுதியில் கூறிவிடுகிறார். அவர் வகுத்த இலக்கணம்