பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 쇼 69 பின்னர் அவர் பாடப்போகும் காப்பியத்தின் கட்டுக்கோப்பைக் காப்பாற்றும் இயல்புடையதாகலின் அதனை வரிசைப்படுத்திக் காண்டல் தேவையானது. 11 பாடல்களையுடைய திருக்கூட்டச் சிறப்பு என்ற பகுதி, காப்பியந் தொடங்குவதற்கு முன்னர், அக் காப்பியத்தின் நுழைவாயிலாய், முகவுரையாய், பாயிரமாய் அமைந்துள்ளது. மரபுபற்றிப் பாயிரம் என்ற பெயருடன் நூலின் தொடக்கத்தில் உள்ள 10 பாடல்களைப்பற்றிப் பின்னர்க் காணலாம். திருக்கூட்டச் சிறப்பு (1) அடியவர் மேனிமேல் நீறுபூசியுள்ளனர் (3) (2) அகில காரணர் தாள் பனிபவர் (4) (3) கைத்திருத்தொண்டு செய்கடப்பாட்டினார் (5) (4) உள்ளும் புனிதர்கள் (6) (5) மாதொர்பாகர் மலர்த்தாள் மறப்பிலார் (7) (6) கோதிலாக் குணப் பெருங்குன்றனார் (7) (7) கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் (8) (8) ஒடும் செம்பொனும் ஒக்க நோக்குவார் (8) (9) கும்பிடலேயன்றி விடும் வேண்டாதவர் (8) (10) ஆரம் கண்டிகை ஆடை கந்தை (9) (11) பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலார் (9) (12) ஈர அன்பினர் (9) (13) யாதும் குறைவிலார் (9) (14) வீரர் (9) வலப்புறம் வளைகோட்டில் உள்ளவை பாடல் என் சேக்கிழார் கூறும் தொண்டர் இலக்கணம் சைவர்கட்கு மட்டும் அன்று பக்தர்கள், தொண்டர்கள், அடியார்கள் என்ற எந்தப் பெயரில் கூறினாலும் மேலே கண்டபடி இலக்கணங்களை அவர் களிடம் காண்கிறார் சேக்கிழார். இந்தப் பதினான்கில் 1,5,10 என்ற மூன்றுதான் சைவர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட சமயத் தாருக்கு உரியனவாகும். பெரிய புராணத்தில் காணப்பெறும் அத்துணை அடியவர்களும் சைவர்களே என்பதில் ஐயமில்லை. அப்படியானால் சேக்கிழார் கூறும் 14 இலக்கணங்களுள் 3 மட்டுமே சைவர்கட்கு மட்டும் உரியனவாகக் கூறியதன் நோக்கம் யாது? மூன்று என்று கூறினாலும் மூன்றாவது எனக் குறிப்பிடும் 10ஆவது இலக்கணத்தில் இரண்டு பண்புகள் கூறப் பெற்றுள்ளன,