பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அவற்றுள் ஒன்றுமட்டுமே(கண்டிகை) சைவர்கட்குத் தனிப்பட்ட குறியீடு. கந்தை என்பது எல்லாப் பக்தர்கட்கும் அவர்கள் எந்தச் சமயத்தை, எந்த நாட்டை, எந்தக் காலத்தைச் சேர்ந்த வராயினும் பொதுவாகும். திருத்தொண்டத் தொகையில் காணப்பெறும் சிவனடியார் களைப்பற்றிக் காப்பியம் பாட முற்படும் சேக்கிழார் அவர்கட்குரிய பொது இலக்கணத்தை வகுப்பது முறையானதே யாகும். அப்படியானால் அவர் வகுக்கும் இலக்கணம் சிவனடியார் கட்கே சிறப்பாக அமைவதாக அல்லவா இருத்தல் வேண்டும்? அதைவிட்டுவிட்டு 14 இலக்கணம் வகுத்து அதில் 2% இலக்கணம் மட்டும் சிவனடியார்கட்குரிய தனி இலக்கணமாக அமையுமாறு வகுத்தார் என்றால் சேக்கிழார் சிந்திக்காமற் செய்தாரா? சேக்கிழார் மேல் இவ்வாறு கூறுவது அடாத செயலாகும். அப்படியானால் தெரிந்தே இவ்வாறு செய்தார் என்றால் அதில் ஆழமானதும் மிகச் சிறந்ததுமான ஒரு காரணம் இருத்தல் வேண்டும். அந்தக் காரணத்தைக் காணமுயல்வது நம்முடைய கடமையாகும். அனைத்துலகுக்கும் பொருந்தும் பொது இலக்கணங்கள் பெரிய புராணத்தில் வரும் பக்தர்கள் அனைவரும் சிவபெருமானை வணங்கும் சிவனடியார்கள்தாம். ஆனால் பக்தர்கள் என்ற சொல்லுக்குரிய அனைத்துத் தகுதிகளும் வாய்ந் தவர்கள். எனவே மிகப் பரந்தும் விரிந்தும் உள்ள நிலையில் பக்தர்கட்குரிய இலக்கணங்களைச் சேக்கிழார் வகுக்கிறார். இவை எல்லா நாட்டிலும், எல்லாக் காலத்திலும் எல்லாச் சமயங்களிலும் தோன்றிய, தோன்றுகின்ற, தோன்றப்போகும் பக்தர்கள் அனைவருக்கும் பொதுவான இலக்கணங்கள். முன்னர் நாரத பக்தி சூத்திரம், மேனாட்டுக் கொள்கைகள் என்பவற்றில் பக்தர்கள்பற்றி என்ன என்ன இலக்கணங்கள் கூறப் பெற்றனவோ அவை அனைத்தையும் சுருக்கி இந்த 14 இலக்கணங்களாகச் சேக்கிழார் வகுத்துக் கொடுத்துள்ளார். சைவர்கட்கே உரிய 24 இலக்கணங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் மீதம் உள்ள 11% இலக்கணங்களும் எந்த நாட்டுப் பக்தருக்கும், எந்தச் சமயத்தைச் சேர்ந்த பக்தருக்கும் பொருந்தும் என்பதை எளிதில் அறிய முடியும். எனவே சேக்கிழார் பக்தர்கள், தொண்டர்கள் அடியார்கள் என்பவர்கள்பற்றிக் கூறிய இலக்கணம் அனைத் துலகங்கட்கும் என்றும் பொருந்துவதான (Universal Definition) இலக்கணங்கள் என்று கூறவேண்டும்.