பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தொடக்கத்தில் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை, ஒலியளவு என்பவற்றுடன் அவை பிறக்கும் உடற்பகுதிகளையும் விரிவாகக் குறித்துச் செல்கிறார். வாய்மொழியாகவே வழங்கிய இலக்கியத் திற்கு இவ்வாறு இலக்கணம் வகுத்தல் பொருந்தாமை தெற்றென விளங்கும். இதனுடன் நில்லாமல் ஒருபடி மேலே சென்று தேவையான இடங்களில் எழுத்துக்களின் வரிவடிவ அமைப்பையுங் கூறுகிறார் ஆசிரியர். நூன் மரபின் 14ஆவது நூற்பாவைப் பழைய உரையாசிரியர் பலரும் எழுத்தில் பகர மகரங்களிடை வேறுபாடு காட்ட எழுந்தது எனக் கூறிப்போயினர். ஆனால் இந் நாள் உரையாசிரியர் பலரும் இதனை மறுத்து, மகரக் குறுக்கத் தைக் காட்டவே இந்நூற்பா எழுந்தது எனக் கூறுகின்றனர். இது எவ்வாறாயினும் மகரக் குறுக்கத்தை வெறும் ஒசையளவில் குறிப்பிட்டுச் சொல்லாமல் அதன் வரி வடிவத்தை ஆசிரியர் குறிப்பிட்டார் என்றால், எழுத்து வடிவம் தொல்காப்பியனார் காலத்தே நன்கு வளர்ந்து செம்மை அடைந்துவிட்டது என்பது பெறப்படும். "மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் "எகர ஒகரத்தியற்கையும் அற்றே" "புள்ளியில்லா எல்லா மெய்யும் ......... என்ற தொடர்கள் மெய்யெழுத்துக்களையும் எகர ஒகரங்களை யும் புள்ளியிட்டு எழுதும் மரபு இருந்ததை அறிவிக்கும். சில ஆண்டுகள் முன்னர்வரைத் தமிழகத்தில் பெரு வழக்காய் இருந்தது பனை ஒலையில் எழுதும் முறையேயாகும். இதில் வேடிக்கை என்னவெனில் பனை ஒலையில் எழுதும்பொழுது புள்ளியிடுதல் இயலாத காரியம். ஒலையில் புள்ளி குத்தினால் ஒலை கிழிந்துவிடும். எனவே 'தொல்காப்பியம் என்ற சொல் 'தொலகாபபியம' என்றுதான் ஒலையில் பொறிக்கப்பட் டிருக்கும். பன்னூறு ஆண்டுகளாக இத் தமிழகத்தில் நூல் களை ஒலைச் சுவடிகளில் எழுதினர் என்றும், அவ்வாறு எழுதுகை யில் மெய்யெழுத்துக்களைப் புள்ளி இடாமல் உயிர் மெய் எழுத்துக்களைப் போலவே எழுதினர் என்றும் தெரிகிறது. இது இவ்வாறாயின், தொல்காப்பியனார் மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்' என்று கூறுவது எவ்வாறு? அவருடைய காலத்தில் ஒலையில் அல்லாமல் வேறு சாதனங்களில் எழுதும் முறை இருந்திருக்குமா? எகிப்திலும், மொஹஞ்சதாரோ விலும் காணப்படும் மண்பலகைகள் போன்ற வேறு சாதனங்கள் இருந்திருக்குமா? எழுதும் சாதனம் எவ்வாறாயினும் தமிழ்