பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 47 I இந்தப் பொது இலக்கணங்கட்குப் பொருந்தி வருபவர் அனைவரும் பக்தர்களே என்று நிறுவிவிட்டு, பொதுவிலிருந்து சிறப்புக்குச் செல்லத் தொடங்கித் தமிழகத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றின பக்தர்கள் வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறார் கவிஞர். பக்தர் இலக்கணம் என்று இவர் வகுத்தமைக்கு அடிப் படை யாது? அதுவே அவருடைய தனிச் சிறப்பாகும். பல்வேறு பட்ட வரலாறுகளையும் கூர்ந்து நோக்கிய சேக்கிழார் இந்த வேறுபாடுகளிடையே ஓர் ஒருமைப்பாட்டைத் (Unity in Diversity) தம் கூர்த்த மதியால் காண்கிறார். தாம் பாட வேண்டிய பெரிய புராணத்தின் முன்னுரைபோல இந்த மாபெரும் இலக்கணத்தை வகுத்துவிட்டால் தமிழர்களுடைய பரந்த பார்வைக்கு ஒரு எடுத்துக் காட்டாக இது அமையும். சைவப் பக்தர்கள் என்ற சிறிய வட்டம், பக்தர்கள் என்ற பெரிய வட்டத் தினுள் அடங்குவதாகும். சேக்கிழார் கூறிய பக்தர் இலக்கணத்துள் வைணவ, கிறித்துவ, இஸ்லாமிய பக்தர்களும் அடங்க முடியும். சேக்கிழாரின் பார்வை அனைத்துலகப் பார்வையாகவே இருந்தது என்பதனை விளக்கவே இதுகாறும் விளக்கம் தரப் பெற்றது. அவருடைய காப்பியம் சைவர்களின் 12ஆவது திருமுறை யாக வைக்கப்பட்டிருப்பினும், அதிலுள்ள வரலாறுகள் தமிழகத் தில் வாழ்ந்த சைவத் தொண்டர்கள் பற்றியனதாயினும், காப்பியப் புலவனுடைய பார்வை அனைத்துலகப் பார்வை என்பதை மனத்துள் கொள்ளவேண்டும். சேக்கிழாரைச் சைவம் என்ற சிறு வட்டத்துள் அடைத்துவிட்ட காரணத்தினாலேயே அவருடைய இந்த விரிந்த பார்வைபற்றி யாரும் சிந்திக்காமல் விட்டு விட்டனர். சைவ சமயத் தொண்டர்களின் வரலாறு கூறவந்த ஒரு கவிஞன் அந்த வரையறையை விட்டு உலகப் பொதுநோக்கில் பக்தர்கள்பற்றிய இலக்கணம் வகுக்கலாமா? என்ற வினா நியாயம் போல் தோன்றினாலும் அது சரியான வினாவாகாது. பெருங் கவிஞர்கள் அனைவரும் அனைத்துலகப் பார்வை உடையவர்கள்தாம். அவர்கள் எடுத்துக்கொண்ட கதைப் பொருள் ஒரு வட்டத்துள் அடங்குவதாக இருப்பினும், அந்த சிறு உலகத்திலிருந்து பேருலகத்தைக் காட்ட முற்படுவதே பெருங் கவிஞரின் கடனாகும். இராம காதை வைணவர்கட்கே உரியது என்று பலரும் நம்புகிறோம். திருமாலே இராமனாக அவதரித் தார் என்று பலரும் கூறக் கேட்கிறோம். இந்தக் கதையைத் தன் காப்பியப் பொருளாக ஆக்கிக்கொண்ட கம்ப நாடன் மூவருக்கும் மேலான பரம்பொருளையே பாடுகிறான். சிற்றுலகம் (Microcosm) Guayavariš5/6ir (Macrocosm) sju igli srebruang,