பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 7 2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இம்மாபெருங் கவிஞர்கள் காட்டத் தவறுவது இல்லை. மேலும் சேக்கிழாரைப் பொறுத்தவரை இப் புதுவழியில் செல்வதற்கு வழி காட்டியவர் அவர் வழிபட்ட முதல்நூல் ஆசிரியராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளே யாவார். அப்பெருமான் பாடிய திருத்தொண்டத்தொகை என்ற பதிகம்தான் அடியார்கள் பெயர் களைக் கூறி இவர்களைப்பற்றி இந்நாடு அறிந்து கொள்ள வழி செய்தது. 11 பாடல்களையுடைய அப் பதிகத்தில் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள பாடல்களும் 11ஆம் பாடலும் தனி அடியார்கள் பற்றிக் கூறும் பாடல்களாகும். 10ஆம் பாடல் 'பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே " என வருகிறது. இப் பாடலில் தனிப்பட்ட அடியார்களை அல்லாமல் கூட்ட மாகச் சிலரைக் குறிப்பிட்டு அவர்கட்கும் தாம் அடியவனே என்கிறார் நம்பியாரூரர். அவர் பெயர் தந்த கூட்டத்தார்: (1) பக்தர்களாகிப் (இறைவனை) பணிகின்றவர்கள் (2) பரமனையே பாடுகின்றவர்கள் (3) சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்கள் (4) திருவாரூர்ப் பிறந்தவர்கள் (5) மூன்று வேளையும் திருமேனி (இறைவன் திருவுருவை) தீண்டுபவர்கள் (6) முழுநீறு பூசிய முனிவர்கள் (7) அப்பாலும் அடிசார்ந்தவர்கள் என்பவராவர். இதிலும் சைவர்கள் என்று இனம் பிரித்துக் கூறத் தக்கவர்கள் 3, 6 என்ற இரு கூட்டத்தார் மட்டுமே. உருவ வழிபாடு செய்யும் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களையும் 5ஆவது தொகுதி குறிக்கலாம் என்றால் கூறப்பெற்ற ஏழு கூட்டத்தாருள் சைவர் என்று இனம் காட்டக்கூடிய கூட்டம் சித்தத்தைச் சிவன் பாலே வைத்தவர், முழுநீறு பூசிய முனிவர் என்ற இருவகையார் தா.ம.