பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 473 மூவர் முதலிகளுள் ஒருவராகவும் சைவ நாயன்மார்களில் முக்கியமானவர்களுள் ஒருவராகவும் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் பாடியது எனத் தெரிந்தமையின் இப்பாடலில் உள்ள கூட்டத்தார் எழுவரையும் சைவர்கள், சிவனடியார்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறோம். இப்பாடலைச் சைவம் பற்றியோ அடியார்கள் பற்றியோ ஒன்றும் அறியாத ஒருவரிடம் காட்டினால் உலகில் எங்கும் வாழும் பக்தர் களை, இறையுணர்வுடைய பெருமக்களைக் குறிப்பதாகவே கொள்வர். (1) பக்தர்களாகப் பணிபவர்கள் (2) பரமனையே பாடுகின்றவர்கள் (3) திருவாரூர்ப் பிறந்தவர்கள் (4) அப்பாலும் அடிசார்ந்தவர்கள் என்று கூறினால் உலகில் உள்ள எல்லாப் பக்தர்கட்கும் இந்த இலக்கணம் பொருந்துமன்றோ? அதிலும் 'அப்பாலும் அடிசார்ந்தார்' என்ற தொடர் சுந்தரமூர்த்தி களுடைய அனைத்துலகங்களையும் தழுவிய பார்வையை அல்லவா குறிக்கிறது? அப்பாலும் என்றால் காலம், தேசம் இரண்டிற்கும் அப்பால் என்று பொருளாகும். அதாவது இந்த உலகில் மட்டு மன்று. இறைவன் படைத்த அண்டத்தில், எந்தக் காலத்திலும், இறந்த காலத்திலோ, இன்றோ நாளையோ வாழ்பவர்கள் இறைவன் திருவடியை நாடுபவர்களாக இருப்பினும் அவர்கட்கும் தாம் அடியேன் என்றல்லவா சுந்தரர் பாடுகிறார். இதைவிட அனைத்துலகத்தையும் தழுவிய பார்வையை வேறு எங்கே சென்று தேடமுடியும்? இந்த துணுக்கத்தைச் சேக்கிழார் என்றோ தெரிந்து கொண்டார். ஆனால் குறுகிய வட்டத்துள் துளையப்படும் சைவ சமயவாதிகள் இதனை இன்னமும் தெரிந்து கொள்ள வில்லை; தெரிந்து கொள்ளவும் மறுக்கின்றனர். இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று, அவனாலேயே அடியெடுத்துக் கொடுக்கப் பெற்றுச் சுந்தரர் பாடிய பாடலிலேயே குறுகிய வட்டத்தைவிட்டு அனைத்துலகத்தையும் அணைத்துக் கொள்ளும் பார்வை இருப்பதைச் சேக்கிழார் அறிந்து கொள் கிறார். சேக்கிழாருக்குமேகூட அடியெடுத்துத் தந்த இறைவன் 'உலகெலாம் என்றுதான் அடியெடுத்துத் தந்தான். எனவே இந் நாட்டுச் சைவச் சான்றோர் பார்வை உலகளாவியது என்பதை அறிந்த சேக்கிழார் பக்தர்களின் பொது இலக்கணத்தை வரை யறுத்துத் தருகின்றார். அதில் சைவர்கள் என்றில்லாமல் உலக முழுவதிலும் எல்லாக் காலத்திலும் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப் போகும் பக்தர்கள் இலக்கணத்தை வகுத்ததில் வியப்பென்ன இருக்கிறது?