பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பெரியபுராண அமைப்பு காண்டம், படலம்-பிரிவினைக்குப் பெரியபுராண வரலாறுகள் இடந்தரவில்லை சேக்கிழாருக்கு முன்னரே சிலம்பு, மேகலை, பெருங்கதை, சூளாமணி, இராமாயணம் என்பவை காப்பிய வடிவில் தமிழில் இருந்தன. சங்கப் பாடல் முதல் தம் கால இலக்கியம் வரை நன்கு கற்றுத் தேர்ந்திருந்த சேக்கிழார் இவற்றையும் நன்கு கற்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. தாம் காப்பியம் பாட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் இவற்றுள் எதையாவது தமக்கு முன்னோடியாகக் கொள்ளலாமா என்றும் நினைத் திருப்பார். ஆனால் இவர் பாட எடுத்துக்கொண்ட காப்பியப் பொருளுக்கு இந்நூல்களின் அமைப்புமுறை வழிகாட்டுவதாக இல்லை. காண்டம், சருக்கம் என்ற பிரிவினைகளிற்கூட அவருடைய காப்பியம் புது வழியை மேற்கொள்ள வேண்டி நேர்ந்துவிட்டது. புதுவழி வகுத்துக் கொண்டார் பெரும் பிரிவான காண்டங்களாகப் பிரிப்பதற்கு அந்த உதிரி வரலாறுகள் இடந்தரா. எனவே பெரும் பிரிவினை செய்வதை அவர் மேற்கொள்ளவில்லை. சிறு பிரிவுகளையாவது மேற்கொள்ளலாம் என்றாலும் எங்கே பிரிப்பது என்ற வினா விற்கு விடை காண்பது கடினமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் அவர் சிந்தித்து மேற்கொண்ட புதுவழி மிகச் சிறப்பாக அமைந்துவிட்டது. மதுரையில் நடப்ப தால் மதுரைக் காண்டம் எனப் பிரிவினை செய்தார் இளங்கோ அடிகள், பதுமையின் திருமணம் முக்கியச் செய்தியாகலின் 'பதுமையார் இலம்பகம்' என்று பிரித்தார் திருத்தக்கத்தேவர். ஆனால், சேக்கிழார், மூல நூலாகிய திருத்தொண்டத் தொகை யின் 11 பாடல்களில் வரும் சுவையான சொற்களை அப்படியே எடுத்துத் தம் நூலின் சருக்கங்களின் பெயர்களாக இட்டு