பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 7 6 பெரியபுராணம்- ஓர் ஆய்வு விட்டார். இப்பிரிவினையால் சிறிதும் பெரிதுமாகச் சருக்கங்கள் அமைந்ததுபற்றி அவர் கவலைப்படவில்லை. வேறு வழியே இல்லாதபொழுது இந்தப் பிரிவினையும் அழகாகவே அமைந்து விட்டது. பிற்காலத்தில் வந்த சைவப் பெருமக்கள் யாரோ மற்றக் காப்பியங்கள் போலப் பெரிய புராணத்துக்குக் காண்டப் பிரிவினை இல்லையே என்று வருந்தி முதல் ஐந்து சருக்கங்களை முதற்காண்ட்ம் என்றும் 6 முதல் 13 வரை இரண்டாம் காண்டம் என்றும் பிரித்துத் தலையிலும் எழுதிவிட்டனர். எவ்விதமான பொருத்தமு மில்லாமல் இந்தக் காண்டப்பிரிவினை தொங்கு கிறது. நியாயமாகத் தில்லைவாழ் அந்தணர் சருக்கத்தில்தான் நூல் தொடங்கி இருக்கவேண்டும். ஆனால் அப்படித் தொடங்கி விட்டால் மூலவராகிய சுந்தரர் வரலாற்றைப் பாட முடியாமற் போகும். சுந்தரர் பாடலில் வரும் முதலடியைச் சருக்கப் பெயராக வைக்கவேண்டுமானால் அந்தப் பாடலைச் சுந்தரர் பாடுகின்ற சந்தருப்பம் வரும்வரை அவருடைய வரலாற்றைக் கூறும் பகுதியை எந்தச் சருக்கத்தில் சேர்ப்பது? இந்த இக்கட்டை அற்புதமாக வென்று விடுகிறார் கவிஞர்! தொண்டத் தொகைப் பாடல்கள் அடிப்படையில் சருக்கப் பிரிவினை செய்தார் சுந்தரர் இந்த உலகிடைப் பிறந்தது ஏனைய மக்களைப் போல அன்று. திருக்கயிலையில் இருந்த அவர் ஒரு காரணத் திற்காக இறைவனால் இம் மண்ணில் மனிதனாகப் பிறக்குமாறு ஏவப்பெற்றார். எனவே அவர் திருநாவலூரில் பிறந்து வளர்ந்து திருவாரூர் சென்று அடியார்கள் வரலாற்றைத் திருத்தொண்டத் தொகை என்ற பதிகத்தில் பாடினார். அப்படியானால் இந்த அரிய பதிகத்தைப் பாடக் காரணமாக இருந்தது அவருடைய மானிடப் பிறப்பு. அந்த மானிடப் பிறப்பு அவருக்குக் கிடைப் பதற்குக் காரணமாக இருந்தது கயிலை மலையாகும். எனவே 'திருமலைச் சருக்கம் என்று முதல் சருக்கத்திற்குப் பெயர் கொடுத்தார். அந்தச் சருக்கத்தில் கயிலமலையின் சிறப்பு, அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகள் என்பவற்றைக் கூறிவிட்டு, அங்கிருந்து வந்து இம்மண்ணில் பிறந்த நம்பியாரூரரைப் பாடி, அடியார்கள் கூட்டம் நிரம்பிய நாடாகிய சோழ நாட்டைப் பாடுகிறேன் என்று திருநாட்டுச் சிறப்புக் கூறுவதற்குத் தோற்றுவாய் செய்துகொள் கிறார். இதனால் அடுத்துச் சோழ நாட்டின் தலை நகரத்தைப் பேசுவது பொருத்தமாக அமைந்து விடுகிறது. இதுவரைக் கூறிவந்த சேக்கிழாருக்கு இப்பொழுது காப்பிய அமைப்பில் ஒர் இடையூறு வருகிறது. நாடும் நகரமும் கூறிய பிறகு அந்த