பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண அமைப்பு 47 7 நாட்டில் அந்த ஊரில் காப்பிய நாயகர் தோன்றினார் என்று பாடுவதுதானே முறை! ஆனால் இவர் கூறவந்த ஆலாலசுந்தரர் சோணாட்டிலோ, திருவாரூரிலோ பிறக்கவில்லை! எனவே நாடு, நகரச் சிறப்புக் கூறிய ஆசிரியர் வரலாற்றைத் தொடங்குமுன் திருக்கூட்டச் சிறப்பு என்ற ஒரு பகுதியைப் புகுத்துகிறார். இப்பகுதி எத்துணைச் சிறந்தது என்று முன்னரே பேசப்பட்டது என்றாலும் திறனாய்வு முறையில் காப்பிய அமைப்பு, கட்டுக் கோப்பு என்று கண்டால் இப்பகுதி எதனுடனும் ஒட்டாமல் இடைப்பிறவரலாகவே அமைந்துள்ளது. இதில் உள்ள இடர்ப்பாட்டை அறிந்தும் இதனை ஏன் மேற்கொண்டார்? அப்படியானால் காப்பியத்துடன் தொடர்பில்லாத இந்தப் பகுதியைக் கவிஞர் ஏன் இங்கே அமைக்க வேண்டும்? இதனை இங்கு வைப்பதன் மூலம் சேக்கிழார் இரண்டு பயன்களைப் பெறவைக்கிறார். முதலாவது பயன் தோற்றுவாய் செய்யப் பயன்பட்டது. நகரச் சிறப்பில் திருவாரூரைக் கூறிவிட்ட ஆசிரியர் அடுத்துத் திருவாரூரில் இறைவன் உறையுங் பூங்கோயிலில் தேவாசிரிய மண்டபம் என்று ஒன்றுள்ளது. அதில் ஒப்பற்ற பக்தர் களாகிய சிவனடியார்கள் எப்பொழுதும் நிறைந்திருப்பார்கள் என்று கூறிவிட்டு, 'இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான் அந்தமில் புகழ் ஆலால சுந்தரன் சுந்தரத் திருதொண்டத் தொகைத் தமிழ் வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம் : என்று முன்னுரை செய்து கொள்வதால் அடுத்துச் சுந்தரருடைய வரலாற்றைத் தொடங்குவதற்குப்பொருத்தமாக உள்ளது. இதற்கு முன்னர் யாரும் தொடாத ஒரு தலைப்பைக் கொண்டு காப்பியம் அமைக்கத் தொடங்கிய கவிஞர் எவ்வளவு சிறந்த முறையில் அக் காப்பிய மரபு கெடாமல் இதுவரைக் கொண்டு செல்கிறார் என்பதைக் காணமுடிகிறது. கயிலை மலையிலிருந்து வந்த ஆலாலசுந்தரர் திருமுனைப் பாடி நாட்டில் திருநாவலூரில் பிறந்து இறையருள் பெற்றுத் திருவாரூர் சென்று இறைவன் திருக்குறிப்பின்படித் திருத் தொண்டத் தொகையைப் பாடினார் என்ற வரையில் திருமலைச் சருக்கம் தொடர்வது பொருத்தமுடையதாகவே உள்ளது. இதன் இறுதிப்பாடலில்