பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 - பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'தம்பிரான் தோழரவர் தாம் மொழிந்த தமிழ்முறையே எம்பிரான் தமர்கள்திருத் தொண்டேத்தல் உறுகின்றேன் ? என்று மேலும் தொடர்வதற்குத் தோற்றுவாய் செய்து கொள் வதும் பொருத்தமாகவே உள்ளது. அவர் மொழிந்த முறை யிலேயே கூறுகின்றேன் என்று கூறிவிட்டமையின் வைப்பு முறையில் மாறுபாடு செய்யத் தேவையில்லாமற் போய்விட்டது. இந்த முறையை மாற்றாமையினால் ஒவ்வொரு தொண்டத் தொகைப் பாடலின் முதலடியையும் சருக்கப் பெயராக அமைக்க முடிந்தது. வேறு எவ்வகையிலும் சருக்கப் பெயர்களைப் பிரித்துத் தரமுடியா தாகலின் கவிஞர் அப்படியே அதனை ஏற்றுக் கொண்டார். தொகையின் முதலடி சருக்கப் பெயரானால் 1ஆம் சருக்கமும் 13 ஆம் சருக்கமும் ஆசிரியர் ஏன் தாமே படைக்க வேண்டும்: இவ்வாறு செய்யாமல் பாடல்கள் எண்ணிக்கையை வைத்து ஏறத்தாழச் சம அளவுடன் சருக்கங்களைப் பிரித்திருக்கலாம் என்றால் சுந்தரர் பாடல் முறை வைப்பை மாற்றவேண்டி வந்திருக்கும். வரலாற்று முறைவைப்பை மாற்றியிருந்தால் சருக்கப் பெயர்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் போயிருக்கும். எனவே இவை இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்துக் கவிஞர் முறை வைப்பை மாற்றாமலே சருக்கப் பெயர்களையும் கொடுத்துக் கொண்டு செல்கிறார். இந்த முறையில் தொடக்கத்தில் திருமலைச் சருக்கம் என்று தாமாக பெயர் தந்து நூலைத் தொடங்கின. கவிஞர், அதே முறையில், இறுதியாக வெள்ளானைச் சருக்கம் என்ற ஒன்றுடன் காப்பியத்தை முடிக்கின்றார். முதல், கடைசி, சருக்கப் பெயர்கள் கவிஞருடையவை. ஏனைய சுந்தரருடையவை. எனவே தில்லைவாழ் அந்தணர் சருக்கம், இலைமலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்பன போன்ற சருக்கப்பெயர்கள் சுந்தரரு டைய திருத்தொண்டத் தொகையின் ஒவ்வொரு பாடலின் முதலடியாக அமைந்துவிட்டன. 'தில்லைவாழ் அநதணர்தம் அடியார்க்கும் அடியேன்' 'இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்” 'மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் 'திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட என்ற அடிகள் தொண்டத் தொகையின் முதல், இரண்டு, மூன்று, நான்காம் பாடல்களின் முதலடியாகும். இப்படியே 11 பாடல் களின் முதலடியும் 11 சருக்கப் பெயர்களாக அமைக்கப்பெற்றன.