பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண அமைப்பு 47 9 இவற்றுடன் முதலிலும் கடைசியிலும் ஆசிரியர் தாமாகப் பெயரிட்ட இரண்டையும் சேர்த்து மொத்தம் 13 சருக்கங்களுடன் பெரியபுராணம் விளங்குகிறது. திருக்கூட்டச் சிறப்பைத் திருநகரச் சிறப்புக்கும் தடுத்தாட் கொண்ட புராணத்துக்கும் இடையில் வைத்துத் தொடர்ச்சி ஏற்படுத்திக் கொண்டார் என்று கூறப் பெற்றது. அது முதலாவது பயன் இரண்டாவது பயனும் ஒன்றுண்டு. இவருடைய மாபெரும் காப்பியத்தை அடியார் வரலாறு கூறும் கதைகள் என்றோ சைவத்தைப் பரப்ப எழுந்த நூல் என்றோ யாரும் கருதிவிடாமல், உலகம் முழுவதும் பரவி யுள்ள பக்தர் பற்றிய அடிப்படை உண்மைகளை அறிவிக்கவே இந்நூல் எழுந்தது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இப் பகுதியை நூலைத் தொடங்குமுன் வைத்துள்ளார். இப் பகுதி காப்பியத்துடன் ஒட்டாது என்பதை மாபெரும் கவிஞராகிய அவர் அறியாமல் இருக்க நியாயமில்லை. அப்படியிருந்தும் இதனை இங்கே வைக்கின்றார் என்றால் காப்பிய இலக்கணம் கெட்டாலும் பரவாயில்லை; அதனைவிடப் பெரிய பயனை இது விளைக்கும் என்று அவர் கருதியதால்தான் 'திருக்கூட்டச்சிறப்பு நூல் தொடங்குமுன் வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இவருக்கு முன்னர்த் தோன்றிய உலக மகா கவிஞனாகிய கம்ப நாடனும் செய்துள்ளான். இராமகாதையைப் பாடிவரும் அவனுக்கு உபநிடதங்கள் கூறும் கருத்துக்களைப் பெய்து கடவுள் தத்துவ இலக்கணத்தைக் கூறவேண்டும் என்ற பேராசை ஒவ்வொரு படலத்தின் தொடக்கத்திலும் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் பெரிய பெரிய தத்துவங்களைப் பேசி னாலும் ஒரு பாடலில் எவ்வளவு தூரம் கூறிவிடமுடியும்? எனவே இதற்கென்று ஒர் இடத்தை அவனாகத் தேர்ந்தெடுத்துக் கொள் கிறான். இரணியன் வதைப்படலம் என்ற பகுதி வால்மீகி முதல் எந்த இராமாயணத்திலும் இல்லை. அப்படியிருந்தும் அப் பகுதியைப் புகுத்துகிறான் கவிஞன். இராவணன் மிக்க அவசரத் துடன் மந்திர சபை கூட்டி என்ன செய்யவேண்டும் என்று கேட்கின்ற அவசரத்தில் 357 பாடல்களில் வீடணன் இரணியன் கதையைக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்த இடத்திற்குச் சிறிதும் பொருந்தாத கதையை, நேரங்கெட்ட நேரத்தில், வீடணன் கூறினான் என்று கூறுவது காப்பியக் கட்டுக்கோப் பிற்குப் பெரிய இழுக்கைச் செய்கிறது. உலக மகா கவியாகிய கம்பனுக்கு இது தெரியாதா? நன்றாகத் தெரிந்தும் காப்பிய இலக்கணத்துக்கு ஊறு நேர்ந்தாலும் அதைவிட முக்கியமான பயனை இது விளைக்கும் என்று கருதியதால் இவ்வாறு செய் கிறான். பின்னர் வந்த சேக்கிழாரும் இதனை அப்படியே பின்