பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு பற்றுகிறார். கம்பனது காப்பியம் முழுவதும் மறைந்தாலும் இந்த ஒரு படலம் இருந்தால் அவனை அறிந்து கொள்ள முடியும். அதே போலத் திருக்கூட்டச் சிறப்பு என்ற பகுதியால் உலகில் உள்ள பக்தர்கட்கு இலக்கணம் முழுவதுமாகப் பேசப்படுவதனை அறிந்து கொள்ள முடியும். ஏனைய காப்பியங்கள் போலப் பெரிய புராணத்தில் திருப்பு மையங்கள், உச்ச கட்டத்தை நோக்கிச் செல்லுதல், உச்ச கட்ட நிகழ்ச்சி, இறங்குமுகம் என்ற பகுதிகள் எதுவும் இல்லை. இவற்றை நாம் எதிர்பார்க்க வேண்டா என்பதைக் கவிஞர் குறிப் பாகக் கூறுகிறார். தடுத்தாட்கொண்ட புராணத்தின் இறுதிப் பாடல் 'எம்பிரான் தமர்கள் திருத்தொண்டேத்தல் உறுகின்றேன்' என்று கூறுவதால் தனி ஒருவருடைய வரலாற்றுக் காப்பியம் என்று எதிர்பார்க்க வேண்டா; தாம் கூறப்போவது அடியார் களின் திருத்தொண்டையேயாம் எனக் கவிஞர் தோற்றுவாய் செய்கிறார். 'எம்பிரான் தமர்களாகிய அடியார்களைப் பற்றிக் கூற வரவில்லை; அவர்கள் செய்த தொண்டையே கூறுகிறேன்' என்பதால் அத்தொண்டை விளக்க வரலாறுகள் உதவுகின்றனவே தவிர வரலாறுகள் முக்கியமில்லை என்பது நுண்மையான உட்கருத்தாகும். காப்பிய நாயகர் சுந்தரர் அல்லர்; தொண்டு என்ற பண்பேயாம் என்று முன்னர்க் குறிக்கப்பெற்றதை மறுபடியும் நினைவில் கொள்ளவேண்டும். - பாயிரப் பாடல்கள் பற்றிய ஆய்வு உள் தலைப்புகள் யார் இட்டவை? . ஏனைய காப்பியங்களைப் போலப் பெரியபுராணமும் பாயிரம் என்ற பெயரில் 10 பாடல்களைக் கொண்டுள்ளது. 3 பாடல்கள் வாழ்த்து என்ற தலைப்பிலும், 1 பாடல் திருக்கூட்டம் என்ற தலைப்பிலும், 5 பாடல்கள் அவையடக்கம் என்ற தலைப் பிலும் ஒரு பாடல் நூற்பெயர் என்ற தலைப்பிலும், அமைந். துள்ளன. இந்தத் தலைப்புகளைப் பிற்காலத்தில் யாரோ தந்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்த்தும், அவையடக்கமும் கம்பன், சிந்தாமணி, சூளாமணி என்ற காப்பியங்களின் காலத்திலேயே வந்துவிட்டன. - வாழ்த்துப் பகுதியின் முதற்பாடல் இறைவன் அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார் அதைத் தொடர்ந்து பாடினார் என்று சொல்லப்படுகிறது. அடுத்துள்ள பாடல் ஒரு மாபெரும் தத்துவத்தைப் பேசுகிறது. இந்த உடம்பு எடுத்ததன் பயன்.