பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் ま 57 மொழியை வரிவடிவத்தில் எழுதினர் தொல்காப்பியர் காலத்தில் என்பதும், இலக்கியங்கள் அவருடைய காலத்திலேயே பல்கிப் பெருகி இருந்தன என்பதும் வெளிப்படை. பல்வகை இலக்கியங் களும் உரைநடையிலும், செய்யுளிலும் இருந்தமையால்தான் செய்யுளியல் என்ற பெரும்பகுதி ஒன்றைப் பொருளதிகாரத்தில் ஆசிரியர் சேர்த்தார் என்று கருத வேண்டியுள்ளது. யாப்புப் பற்றிக் கூறவந்த ஆசிரியர் அதனை ஏழு வகையாகப் பிரித்து, 'பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ' என்று பெயரிடுகிறார். 'உரை நடைவகையே நான்கென மொழிப' என்று கூறுகையிலும், இது அவர் காலத்துக்கு முன்னர்த்தொட்டு இருந்துவருவது என்பதைக் குறிப்பிடுகிறார். அவர் கூறும் வனப்புக்களாகிய 'அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து' என்பவை அவர் காலத்தே தொடர்நிலைச் செய்யுள் பல்கி இருந்தமையை நன்கு விளக்கும். இதுவரைக் கூறிய வற்றிலிருந்து ஒர் உண்மை நன்கு புலப்பட்டே தீரும். இன்று நமக்குக் கிடைக்கும் பழைய இலக்கணமாகிய தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் தமிழ் மொழியில் மிகச் செம்மையான வரிவடிவம் பெற்ற நெடுங்கணக்கு இருந்தது என்பதும், பல்வேறு வகையான இலக்கியங்கள் உரை நடையிலும், செய்யுள் வடிவிலும் இருந்தன என்பதும் அந்த உண்மையாகும். அடுத்து இன்று நமக்குக் கிடைக்கும் சங்கப் பாடல்கள் என்பவை தொல்காப்பியனார் காலத்துக்கு மிகவும் பிற்பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் அகம், புறம் என்ற பிரிவினையுைம், அவற்றின் கூறுபாடுகளையும் இவற்றின் அடிப்படையான முதல், கரு, உரிப் பொருள்கள் பிரிவினையையும் நம்மைப் பொறுத்தவரை முதன் முதலில் சுட்டிக் காட்டியவர் தொல்காப்பியனாரே ஆவர். எனவே அவர் அகத்திணைக்குரிய செய்யுள் வகை எது எனக் கூறவந்த இடத்தில், 'நாடக வழக்கினும் உலக வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரியதாகும் என் மனார் புலவர்' என்று கூறிச் செல்கிறார். ஆனால் இன்று கிடைத்துள்ள அகப் பாடல்களில் கலித்தொகை நீங்கலாக ஏனைய அனைத்தும் இந்தச் சட்டத்திற்கு மாறாகவே உள்ளன. அகத்திணைக்குரிய இலக்கணம் வகுத்த தொல்காப்பியனார் கூறிய சட்டத்தை தொண்ணுாற்று ஐந்து சதவிகிதம் பாடல்களில் புறக்கணிக்கும்