பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண அமைப்பு 48 H இறைவன் திருவடியைத் தொழவேண்டும் என்பதேயாம். உடல் எடுத்ததன் நோக்கம் இறையடி தொழவேயாம் என்பதைத் திருக்குறளுக்குப் பிறகு விளக்கமாகக் கூறிய சிறப்புப் பெரிய புராணத்திற்கே உண்டு. மூன்றவாதாக உள்ள பாடல் விநாயகர் வணக்கமாகும். 12ஆம் நூற்றாண்டில் விநாயகர் வணக்கம் தமிழகத்தில் வலுவாகக் கால்கொண்டுவிட்டமையின் பெரிய புராணத்திலும் இடம் பெற்றதோ என்று நினைக்கத் தோன்று கிறது. தேவார காலத்திலேயே கணபதிபற்றிய குறிப்பு வருதலின் சேக்கிழார் பாடினார் என்று கொள்வதிலும் தவறில்லை. இறை வணக்கத்துக்குப் பிறகு பெரியவர்கட்கு(நீத்தார்) வணக்கஞ் செய்வது கம்ப நாடன் காலத்திலேயும் இருந்ததை அறிகிறோம். திருக்குறளை அடியொற்றி வந்த மரபாக இருத்தல் வேண்டும் இது. ஆனால் சிலம்பும், மேகலையும், சிந்தாமணியும், சூளாமணியும் பிற சமயக் காப்பியங்களாகலின் அவற்றில் இந்த முறைவைப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். சிந்தாமணியின் 3ஆவது பாடல் கூறும் சாது சரணத்தை, நீத்தார் வழிபாடு என்றும் கொள்ளலாம். இறைவன் கட்டளைப்படி காப்பியம் புனைந்தார் இருவர் இவை ஒரு புறமிருக்கக் கம்பன், சிந்தாமணி இரண்டிலும் அவையடக்கம் என்ற தலைப்பில் பாடல்கள் உள்ளன. அவையடக்கம் கூறும் மரபு எப்பொழுது தோன்றிற்று என்று தெரிய வில்லை. ஏனைய காப்பிய ஆசிரியர்கள் கூறாத ஒன்றைச் சேக்கிழார் கூறுகின்றார். 'இறைவன் அடியெடுத்துக் கொடுத்துப் பாடுக என்றமையால்தான் யான் பாடுகிறேன்' என்ற கருத்தில் 'அருளின் நீர்மைத் திருத்தொண்டு அறிவரும் தெருளில் நீர் இது செப்புதற்கு ஆம் எனின் வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய பொருளின் ஆகும் எனப்புகல்வாம் அன்றே என்று கூறுவதே இவர் இறைவன் அருள்வழி நின்று இதனைப் பாடலுற்றார் என்பதற்கு அகச் சான்றாகும். வேறு எந்தத் தமிழ்க் கவிஞனும் இவ்வாறு கூறித் தன் நூலைத் தொடங்கிய தில்லை. எனவே ஏனைய கவிஞர்களைக் காட்டிலும் இக் கவிஞரின் பாடலுக்கும் அவர் விடுக்கும் செய்திக்கும் அதிகமான உரிமையும் அதிகாரமும் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.