பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 பெரியபுராணம்- ஓர் ஆய்வு மில்டனைப்பற்றிப் பேசும், சி. எம்.பெளரா, (C.M.BOWRA) தம்முடைய "வர்ஜிலிருந்து மில்டன் வரை (From Virgil to Milton) என்ற நூலில் கடைசி அதிகாரமாகிய 'மில்டனும் மனித ஊழும்' (Milton and the destiny of man) 6T65rp org:##lai Lilairaud; மாறு கூறுவது இங்கு ஒப்புநோக்கத் தக்கது. 'மில்டன் யுரேனியாவை’ (Urania) அழைத்துத் தனக்கு உள்ளொளி தரவேண்டும் என்று கூறும்பொழுது யுரேனியா என்பது ஏதோ கவிஞன் கண்ட கற்பனை யன்று என்றும், அது தெய்வீக் சக்தி என்றுங் கூறுகிறான். இந்த ஆற்றல் கவிதை புனைவதற்கு அவனுக்கு உதவியதுடன் தேவையான சொற்களை யும் தந்து உதவிற்று. மில்டனின் உள்ளொளி தெய்வீக அசரீரி யாகும். தெய்வீக ஆற்றலுடன் (பரிசுத்த ஆவி-Holy Spirit) இந்த அசரீரி தொடர்பு கொண்டது. ஆதலால்தான் கவிஞன் காப்பியத் தொடக்கத்தில் அதனை விளித்துத் தனக்கு வந்து உதவுமாறு வேண்டுகிறான். சினாயிலும் ஆர்பிலும் (SINA and OREB) மோசஸிடம் பேசிய அசரீரியே யுரேனியா ஆவாள். இத்தகைய தெய்வீக அசரீரியின் உதவியுடன் மில்டனிடமிருந்து வரும் கவிதைகள் தனி மரியாதயுைடன் கேட்கப் பட வேண்டிய வையாகும்.'" இறைவனுடைய கட்டளையை நேரே கேட்டு அதற்குக் கீழ்ப்படிந்து காப்பியம் புனைந்ததாக, உலக இலக்கியங்களில் இரண்டு காப்பியக் கவிஞர்களே கூறியுள்ளனர். வேறு யாரும் துணிவுடன் பிறர் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் இத்தகைய செய்தியைச் சொல்லியதில்லை. அவர்களுள் மூத்தவர் தமிழகத்துச் சேக்கிழார், காலத்தால் இளையவர் ஆங்கில நாட்டு மில்டன். இந்த இருவரும் இறைவன் மனிதனுக் கிரங்கி அருள் செய்த திறத்தைத் தான் காப்பியமாக வடிக்கின்ற னர். இவர்கள் காப்பியம் அமைக்க மேற்கொண்ட மொழிகள் தான் வெவ்வேறானவை. மில்டன் மனிதனின் வீழ்ச்சியைப் பாடினான்; வீழ்ச்சிக்குக் காரணம் இறைவனுடைய திருவருட் குறிப்பை மனிதன் அறிய முயலாமல் போனதாகும். சேக்கிழாரின் காப்பியம் அடியார்களுடைய (மனிதனுடைய) மாட்சியைப் பாடியதாகும்; காரணம் இறைவன் திருவருட் குறிப்பை அறிந்து கொண்டு அவனிடம் முழுவதுமாகச் சரணடைந்து அவன் குறிப்பின் வழி வாழ்வை அமைத்துக்கொண்டு தொண்டு செய்தமையின் மாட்சி பெற்றனர். இந்த இரண்டு காப்பியங்களும் மனிதன் வீழ்ச்சியையும் அவன் மாட்சியையும் முறையே கூறு கின்றன. இரண்டு காப்பியங்களும் இறைவனுடைய திருவருளைப்