பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண அமைப்பு 4 & 3 பெற்று அவனுடைய ஆணையை நேரே கேட்டறிந்து, அந்த ஆணையின் வண்ணம் பாடப்பெற்ற காப்பியங்களாகும். உலக காப்பியங்களுள் இவ்விரு காப்பியங்களும் நம்மால் பெரிதும் மதித்துப் போற்றி ஏற்கப்பட வேண்டியவையாகும். திருவருள் துணையுடன் காப்பியம் புனைந்தாலும் காலச் சூழ்நிலையைச் சேக்கிழாரால் மீறமுடியவில்லை திருவருள் துணை இருந்தும்கூடச் சேக்கிழார் தம் காலத்து நிலைத்துவிட்ட மரபுகளை மீற முடியவில்லை என்றே நினைக்க வேண்டியுள்ளது. சுந்தரர் இந்த உலகிடைப் பிறப்பதற்கு உரிய காரணமாய் அமைந்த நிகழ்ச்சியை இவரே சொல்லித் தொடங்கி யிருக்கலாம். 'இடையில் தொடங்குதல் (RUSI MEDI) என்ற மேனாட்டுக் காப்பிய மரபு தமிழகத்திலும், ஏன்? வடமொழி மரபிலும்கூடக் கிடையாது. பிறப்பு முதல் இறப்பு வரை வரிசையாகக் கூறிச் செல்வது இந்நாட்டுக் காப்பிய மரபு, இது எவ்வாறு இருப்பினும் கயிலையின் ஒருபுறத்தில் உபமன்யு முனிவன் யோகிகள் சூழ இருந்த நேரத்தில் ஆயிர ஞாயிற்றின் ஒளி ஒன்று தோன்றிட முனிவர்கள் அதிசயத்து இது என்ன அதிசயம்?' என்று வினவ, அந்த ஒளியை உபமன்யு முனிவன் தொழுதான். பிறகு அந்த ஒளி நம்பி ஆரூரருடையதாகும் என்று கூறி அவர் கயிலையை விட்டு நீங்க வேண்டிய சூழ்நிலை, பிறகு இப்பொழுது மீட்டும் வந்து சேர்ந்தமை என்ற இரண்டையும் விளக்கினான் என்று திருமலைச் சிறப்பில் தொடங்குகிறார் கவிஞர். 'ருசிமிடி’ என்ற இடையில் தொடங்கும் மரபை ஒரளவு புகுத்தியவர் சேக்கிழாரே! இப்பகுதியில் உபமன்யு முனிவன் நம்பியாரூரருடைய முந்தைய, பிந்தைய வரலாற்றைச் சொன்னான் என்று மரபு பற்றிக் கவிஞர் பாடினாலும், இவ்வாறு முனிவன் கதை கூறும் நிகழ்ச்சியைக் கூறுவதன்மூலம் காப்பியத்தைத் தொடங்குவதற்கு நல்ல ஒரு புது வழியைப் படைத்துக் கொண்டார். மேனாட்டார் கூறும் ருசி மிடி(RUSI MEDI) என்ற முறையில் இடையில் தொடங்கிக் காப்பியத்தைக் கொண்டு செலுத்துவதுபோல் தாமும் ஒரளவு செய்துவிட்டார். இடையில் தொடங்கி முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றை அடுத்துக் கூறிக் காப்பியத்தை வளர்த்துச் செல்லும் முறை இந் நாட்டில் இல்லையாயினும் சேக்கிழார் காப்பிய அமைப்பில் ஒரளவு இதனையும் ஏற்றிக்