பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 84 பெரியபுராணம்- ஓர் ஆய்வு காண முடியும். காப்பியத் தொடக்கத்தில் ஒர் ஒளி உண்டானதை யும், அந்த ஒளி ஆலாலசுந்தரர் கயிலை மீண்டதால் உண்டானது என்பதயுைம் உபமன்யு முனிவன் கூறினான். உடனே 'அவர் யார்? ஏன் இப்பொழுது கயிலை வந்தடைந்தார்?' என முனிவர் கள் கேட்கவும், ஆலாலசுந்தரரின் பழைய கயிலை வாழ்க்கை, இடையில் பூவுலகில் அவர் சென்று செய்த செயல்கள், மறுபடியும் கயிலை ಗ್ದಿ) வரலாறு என்பவற்றை அம் முனிவன் கூறினான் என்று சேக்கிழார், 'என்று மாமுனி வன்றொண்டர் செய்கையை அன்று சொன்னபடியால் அடியவர் தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி இன்றென் ஆதரவ்ால் இங்கு இயம்புகேன் என்று இவ்வாறு கூறி முடிக்கின்றார். எனவே ஆலால சுந்தரர் வாழ்க்கையில் ஒரு பகுதியை இடையே தொடங்குதலாகக் கொண்டால் இக் காப்பியம் ஏனைய தமிழ்க் காப்பியங்கள் கையாளாத புதுமுறையை அல்லது உத்தியை முதன்முறை யாகக் கையாண்டது என்றுங் கூற இடமுண்டு. மன்னர்கள் பெயர் கூறாதது ஏன்? திருவருட்குறிப்பின்படி நின்று காப்பியத்தைப் பாடினதால் போலும் பிற காப்பிய ஆசிரியர்கள் விரும்பிப் பாடும் பகுதிகளை இக் கவிஞர் உதறி விடுகின்றார். ஒரு பெருங்காப்பியத்தில் அரசன், போர் என்ற இரண்டும் தக்க இடத்தைப் பெறும். வீரத்தை வெளிப்படுத்தப் போரே சிறந்த சாதனம் என்ற முறையில்தான் ஹோமரிலிருந்து கம்பன் வரை அனைவரும் போரைப் பெரிதாகப் பாடிச் சென்றனர். ஆனால் சேக்கிழார் இதிலும் புது வழி வகுக்கின்றார். அவருடைய காப்பியத்தில் போருக்கும் அரசர்கட்கும் அதிக இடமும் வாய்ப்பும் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும் இவை இரண்டும் வருகின்ற ஒரிரு இடங்களைப் பயன்படுத்திக்கொண்டு அவர் பாடி இருக் கலாம். ஆனால் அந்த இடங்களை உதறி எறிந்துவிட்டுச் செல்கிறார். ஹர்ஷவர்த்தனனை வென்ற சாளுக்கியப் புலிகேசி, காஞ்சியின் மேல் படையெடுத்து வர, அவனை நரசிம்மவர் மனுடைய படைத் தலைவராகிய பரஞ்சோதியார் வென்று, வெருட்டிச் சென்று அவனுடைய தலைநகராகிய வாதாபியையும் அழித்து மீண்டார். ஒரு தமிழ் மகனுடைய, பின்னர் அடியாராகப் போகின்ற ஒருவருடைய இந்தப் போரை, அவருடைய வீரத்தைச் சற்று விரிவாகப் பாடிக் காப்பியத்திற்கு அழகு கூட்டியிருக்கலாம்.