பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண அமைப்பு 4 & 5 வடநாடு முழுவதையும் வென்ற வனை (ஹர்ஷன் - சாளுக்கியன் (புலிகேசி) ೧೧'ಧೀ அதே : ஒரு தமிழன் கையில் தோற்றான் என்றால் காப்பியப் புலவனுக்கு இதைவிடச் சிறந்த நிழ்ச்சி என்ன கிடைக்கும்? செங்குட்டுவன் வடவரை வென்றதை இளங்கோ எவ்வாறு மனக்கிளர்ச்சியுடன் பாடுகிறார்? ஆனால் பரஞ்சோதியார் வெற்றி கொண்ட இத்தகைய பெரும்போரைச் சேக்கிழார், 'மன்னவற்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகத் துளை நெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்' " என்ற ஒரே பாடலில் முடித்து விட்டார். இதைவிட வியப்பு என்ன வெனில் பரஞ்சோதியார் எந்தப் புலிகேசியை வென்றாரோ அவனுடைய பெயரைக்கூடச் சொல்லவில்லை. பரஞ்சோதியார் பணிபுரிந்த பல்லவ மன்னன் யார் என்றுங்கூட கூற மறுத்து விடுகிறார். முதலமைச்சராக இருந்து பலவிடங்களிலும் சுற்றித் திரிந்து, பல்வேறு கல்வெட்டுகளையும் படித்து, வரலாற்றை நன்கு அறிந்திருந்த சேக்கிழாருக்குப் பல்லவ மன்னன் யார் என்பதும் சாளுக்கியன் யார் என்பதும் தெரியாமல் இரா. அவன் தலைநகரம் வாதாபி என்பதையும் பரஞ்சோதியார் அதுவரை அவனை வெருட்டிச் சென்று அவன்,தலைநகரிலேயே அவனை வென்றார் என்பதையும் கூறும் அளவிற்குத் தெரிந்திருந்த ஒரு வருக்கு மன்னன் பெயர் தெரிந்திராது என்று கூறுவது சரியன்று. அப்படியானால் ஏன் மன்னவன் பெயரைக் கூறவில்லை?இந்தப் பல்லவன் பரஞ்சோதியார் சிவனடியார் என்று தெரிந்தவுடன், 'உம்பர்பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன்! வெம்பு கொடும் போர் முனையில் விட்டிருந்தேன் என வெருவுற்று' அவரை உடனே ஒய்வு கொடுத்து அனுப்பிவிட்டான். இவ்வளவு நல்ல மன்னவனை ஏன் பேர்கூடச் சொல்லாமல் விட்டு விட்டார்? அரசர் பற்றிக் கவிஞர் கொண்டிருந்த கருத்து யாது: மகேந்திரவர்மன் சமணனாக இருந்த காலத்தில் நாவரசருக்குத் துன்பம் இழைத்தான். பிறகு மனம் மாறிச் சமணப் பள்ளிகளை இடித்து, குணபரவீச்சரம் கட்டினான். இவன் விபகடி விருத்தி யிலிருந்து சைவனாக மாறினவன் என்று