பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 & 6 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இவனுடைய திருச்சிராப் பள்ளிக் கல்வெட்டுக் கூறுகிறது. இதனைக் கூறவந்த சேக்கிழார்,

• * * * * * * * * * * * * * * * * * மெய்யுணர்ந்த காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்கு - * * * * * * * - - - - - * * * * * * குணபர ஈச்சரம் எடுத்தான் என்று பாடுகிறாரே தவிர அந்தப் பல்லவன் பெயரைக்கூடக் கூற விரும்பவில்லை. அப்படியானால் மன்னர் என்ற பிரிவினரையே இக் கவிஞர் வெறுத்தாரா? அப்படியும் கூறுவதற்கு இல்லையே! சோழமன்னர்களைக் கூறும்போதெல்லாம் எவ்வளவு அன்புடன் குறிக்கின்றார் என்பதைப் பல இடங்களில் காண முடிகின்றதே! பொதுவாக மன்னர்களைத் திருவுடைமன்னர் என்றும் இறைவனுடைய அருளால்தான் ஒருவன் மன்னனாக இருக்க முடியும் என்றும் கருதும் கொள்கை உடையவர் இக்கவிஞர். மன்னன் இல்லாத உலகம் வாழ முடியாது என்று தாம் நம்புவதை மூர்த்தி நாயனார் புராணத்தில் விரிவாகப் பேசிச் செல்கிறார். 'தாழுஞ்செயல் இன்றொரு மன்னவன் தாங்க வேண்டும் கூழுங்குடியும் முதல் ஆயின கொள்கைத் தேனும் சூழும்படி மன்னவன் தோளினைக் காவல் இன்றி வாழும் தகைத்து அன்று இந்த வையகம்...' "பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் தன்னெடும் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளில் சரித்து வாழும் மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங்காலை இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் " என்ற முறையில் பாடுவதைப் பார்த்தால் அரசர்கள் என்ற நிறுவனத்தைப் பற்றிச் சேக்கிழார் கொண்டுள்ள கருத்தை அறிய முடிகின்றது. மன்னர்களை மக்களின் உயிர் என்று சங்கப் பாடல், கூறுகின்ற தல்லவா? 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் " என்று நினைத்துப் பேசிய கொள்கை சேக்கிழார் காலம்வரைத் தொடர்ந்து இருந்ததாகவே நினைய வேண்டியுள்ளது. இந்த நீண்ட கால நம்பிக்கைக்கு 9ஆம் நூற்றாண்டில் கம்ப நாடன் எதிர்க்குரல் கொடுத்தான். மக்களே உயிர்போல்வர். மன்னன் அந்த உயிரைத் தாங்கி நிற்கும் உடலன்னவன் என்ற கருத்தில் "செயிரிலா உலகினில் சென்று நின்று வாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்