பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண அமைப்பு 소 & 7 என்று அவன் கூறிப் புதிய சிந்தனையைப் புகுத்தினாலும் தமிழக மக்கள் மன்னனை உயிர் என்றே கருதி வந்தனர் என்று தெரிகிறது. சேக்கிழார் கானும் அரசர்கள் எத்தகையவர்கள்? சேக்கிழார் பாடியுள்ள காப்பியத்தில்கூட நின்றசீர் நெடுமாறன், காடவர்கோன் கழற்சிங்கன் முதலிய பேரரசர் களைப் பற்றிப் பாடவேண்டி வருகிறது. அவர்களையல்லாமல் சோழர்குல மன்னனாகிய புகழ்ச் சோழ மன்னனும் பெரிய புராணத்தில் இடம் பெறுகிறான். அரச மரபினருள் சேரர் ஒருவர் (சேரமான் பெருமாள்), சோழர் இருவர் (கோச்செங்கட் சோழர், புகழ்ச் சோழர்), பாண்டியர் ஒருவர் (நெடுமாறன்), பல்லவர் இருவர் (கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோன்), களப்பிரர் ஒருவர் (கூற்றுவர்), சிற்றரசர் நால்வர் (மெய்ப் பொருள், நரசிங்க முனையரையர், பெருமிழலைக் குறும்பர், இடங்கழியார்) எனப் பதினொரு மன்னவர்கள் இப் புராணத்தில் இடம் பெறினும் இவர்களுடைய அரச வாழ்க்கையைப்பற்றிக் கவிஞர் பாடாமற் போனது வியப்பே எவ்வாறு நினைந்து பார்த்தாலும் இரண்டாம் குலோத்துங்கன் காலத்து அமைச்ச ராக இருந்த இவர் அந்த மாபெரும் சோழப் பேரரசு ஆட்டங் கண்டுவிட்டதை நுண்ணுணர்வால் அறிந்தமையின் அரச நிறுவனம் போற்றத் தக்கதன்று என்ற முடிவுக்கு வந்திருத்தல் வேண்டும் போலும்! தமிழ் மொழியில் பெரும் காப்பியங்கள் இயற்றிய கம்பநாடன், சேக்கிழார் என்ற இருவரிடமும் இரண்டு புதுமைகளைக் காண முடிகின்றது. பெருங்காப்பியத்தில் குழந்தைச் செல்வம் பற்றியும், அரசன் பற்றியும் பாடாமல் இருப்பது வியப்பினும் வியப்புத்தான் பதினாயிரம், பாடல்கட்கு மேல் பாடிய கம்பநாடன் குழந்தைச் செல்வத்தைப் பாடாமல் விட்டுவிடுகிறான். நீண்ட காலங் கழித்துத் தசரதன் பெற்ற குழந்தைகள் நால்வரையும் நான்கு பாடல்களில் பதினான்கு வயதுபெறுமாறு செய்துவிடுகிறான். அதேபோலச் சேக்கிழார் மன்னர்கள் பற்றி விரிவாகப் பாட மறுக்கின்றார். இந்த இருபெரும் கவிஞர்களும் முறையே குழந்தையையும், அரசரையும் ஏன் பாட மறுக்கின்றனர்? என்பது விடை காண முடியாத புதிரா கவே உள்ளது. - அரசர்கள் போர்கள் என்பவற்றிற்கு அதிக இடம் தராமல் பாடியது ஏன்? பல்லவர் காலத்திலிருந்தே பல்லவர், சோழர், பாண்டியர் என்பவர்களிடையே ஏற்பட்ட போராட்டங்களில் சில சமயம் 33