பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.88 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஒருவர் கை ஓங்கியிருப்பதும் வேறு சில சமயம் மற்றொருவர் கை ஓங்கியிருப்பதும் வழக்கமாகி விட்டது. எந்த மன்னனுடைய வெற்றியும் நிலைபெற்ற ஓர் ஆட்சிப் பரம்பரையை அமைக்க முடியவில்லை. ஆகவே இந்த மன்னர்கள் புரிந்த போர்கள், அதிற் காட்டிய வீரம் என்பவை பொருளற்ற செயல்களாக ஆகிவிட்டன. இந்த நிலையில் ஆழ்ந்து சிந்திக்கும் ஒரு கவிஞன் இந்த மன்னர்கட்கும், அவர்கள் செய்த போர்கட்கும், அவர்கள் பெற்ற வெற்றிகட்கும் அதிக முக்கியத்துவம் கொடாமல் போன தில் வியப்பில்லை. காப்பிய அமைப்பில் துணிந்து புதுமை புகுத்திய சேக்கிழார், மன்னர் பெருமைபாடும் காப்பிய மரபையும் தகர்த்து விடுகிறார். அரசர்களைப்பற்றி அவர் அதிகம் கவலைப் படவில்லை; ஆனால் அரச நிறுவன அமைப்பின் முக்கியத்து வத்தை ஏற்றுக் கொள்கிறார். மக்கள் வாழ்க்கை சமுதாயத்தில் நன்கு அமையவேண்டுமானால் சமுதாயத்தின் பல உறுப்புக் களையும் இழுத்துப் பிடித்து ஒருவழி நடத்தும் நிறுவனம் தேவைதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த நிறுவனத் துக்குத் தலைமை தாங்கும் அரசன் எத்தகையவனாக இருத்தல் வேண்டும்? இந்த வினாவிற்கும் பலர் பலவிதமாக விடை கூறுவர். மாக்கியவல்லி, கெளடில்யர் போன்றவர்கள் அரசனுக்குத் தேவை எனக் கூறும் இலக்கணங்களைச் சேக்கிழார் ஏற்றுக் கொள்ளவில்லை. உலக வரலாற்றில் அவருடைய காலம்வரை வாழ்ந்த மன்னர்கள் கெளடில்யருடைய முறையைக் கையாண்டவர்க ளாகவே இருந்தனர். ஆனால் அன்றுவரை அவர்கள் சாதித்தது என்ன? அந்தக் கெளடில்யன் உதவி புரிந்து உண்டாக்கிய மெளரிய சாம்ராஜ்யமும் ஏனைய சாம்ராஜ்யங்கள் போலவே பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய் மெல்ல மெல்லப் போய் விட்டதல்லவா? கெளடில்யருடைய முறையைப் பின்பற்றிய மன்னர்கள் நிலைபேறு இல்லாமல் அழிந்துவிட்டனர் என்றால் அத்தகைய மன்னர்களால் பயனில்லை என்பது வெளிப்படை! அப்படியானால் எத்தகைய மன்னர்கள் நாட்டிற்குத் தேவை? சோழப் பேரரசின் அமைச்சர் ஒருவர் இதுபற்றி நன்கு யோசித்து, ஆய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார். எத்தகையவர்கள் அரசராக வேண்டும்? என்ற வினாவுக்கு, பக்தர்கள் மன்னர்களாக இருக்க வேண்டும் என்று விடை காண்கிறார் சேக்கிழார். இதுமுறையா? பக்தர்கள் அரசராக ஆனால் ஆட்சி எவ்வாறு நடைபெறும்? என்ற சந்தேகம் தோன்றுகிறவர்கட்கு விடை கூறுவார்போல, மனுநீதியின் வரலாறு, புகழ்ச் சோழர் வரலாறு, சேரமான் வரலாறு என்ற மூன்றையும் வைக்கின்றார் கவிஞர். யானையும்