பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண அமைப்பு 4 & 9 பாகனும் செய்த குற்றத்திற்குத் தானும் உடன்பிணைக் குற்றவாளி (Vicarious lability) என்று கூறி வாளைத் தரும் மன்னவன் புகழ்ச் சோழன். சாதாரண காலத்தில் பண்புடன் வாழும் மனிதர்கள்கூட அதிகாரம் கையில் வந்தவுடன் நடந்துகொள்ளும் விதமே வேறாகிவிடுகிறது. இதனைக் கம்பநாடனும், 'அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும் பெறலரும் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம் ' என்றல்லவா குறிப்பிடுகிறான். இன்று வாழும் நமக்குக் கம்பன் சொல்லியா இதனைத் தெரிந்து கொள்ளவேண்டும்? இந்த நிலை நேராத மனிதர்கள் அரசர்களாக வரவேண்டும் என்று சேக்கிழார் விரும்புகிறார் என்பதைக் கழறிற்றறிவார் புராணத்தில் வைத்துக் காட்டுகிறார். அரசப் பதவியேற்று யானையில் வரும் அவர், எதிரே உவர்மண் உடம்பெல்லாம் கரைந்திருக்க வரும் ஏகாலியைக் கண்டு இறங்கி வணங்குகிறார். அவன் அஞ்சிப் போய் அரசே! யான் அடி வண்ணான்!” என்கிறான். அதற்குப் புதிதாகப் பதவியேற்ற அந்த மன்னர் கூறும் விடை: 'அடிச் சேரன் அடியேன்! என்றும் திருநீற்றின் வாரவேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என்பதாகும். பக்தன் அரசனானால் இத்தகைய மன்னர்கள் தாம் நாட்டை ஆள்வார்கள். இந்த முறையில் சேக்கிழாருடைய எண்ணம் சென்றிருக்க வேண்டும். எனவேதான் 鑒 சாம்ராஜ்யத்தை நிறுவிய மன்னர்களையும், பெருவெற்றி பெற்ற மன்னர்களையும் பெயரைக் கூடக் கூறாமல் விட்டுவிட்டு, பக்தர்கள் அரசராக ஆன இடங்களில் மட்டும் அவர்கள் புகழை விரிவாகப் பாடு கிறார். பக்தர்கள் என்று கூறினவுடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் பஜனை செய்கின்றவர்கள் என்ற தவறான எண்ணம் நம் மனதில் வந்துவிடக் கூடாது. பெரியபுராணத்தில் வரும் அத்துணைப் பேரும் பக்தர்கள் தொண்டர்கள். ஆனால் அவர்களில் எந்த ஒருவரும் தம் கடமையை விட்டுவிட்டு பஜனை யில் ஈடுபட்டதாகவோ, ஒடிப்போனதாகவோ வரலாறே இல்லை! இல்லறத்தில் இருந்து கொண்டு தாங்கள் மேற்கொண்ட பணி யைச் செவ்வனே செய்து கொண்டிருந்தவர்களே இவர்கள். அதே நேரத்தில் தன்னலம் என்பதை முற்றும் துறந்து, அகங்கார மமகாரங்களை அறவே ஒழித்துப் பிறர்க்குத் தொண்டு செய்வ தையே கடனாகக் கொண்டவர்கள் இவர்கள். யாராக இருப்பி னும் அவர்களை இறைவன் உறையுங் கோவிலாகவே கண்டு அவர்