பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4S 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கட்கு வேண்டும் தொண்டை விடாமற் செய்தார்கள். எனவே சேக்கிழார் காட்டும் பக்தர்கள் அல்லது தொண்டர்கள் என்பவர் கள் 'நாரத பக்தி சூத்திரம் கூறும் இலக்கணத்தை முழுவதுமாகப் பெற்றவர்கள். அரசராகப் பிறந்தவரும், குயவராகப் பிறந்த வரும், நெசவாளியாகப் பிறந்தவரும், படைவீரராகப் பிறந்தவரும், வணிகராகப் பிறந்தவரும் பக்தர்களாக மாறின கதையன்று பெரிய புராணக் கதை. இதன் எதிராக பக்தர்கள் அரசராகவும், குயவராகவும், நெசவாளராகவும், படைவீரராகவும், வணிகர்களாகவும் வாழ்க்கை நடத்திய கதைகளே பெரியபுராணத் தில் வரும் வரலாறுகள். இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு புரிந்துகொண்டால்தான் சேக்கிழாரைப் புரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படையை மனத்துட்கொண்டு பார்த்தால் புகழ்ச் சோழர், சேரமான் பெருமாள், கூற்றுவர், நெடுமாறன் என்போர் பக்தர்கள் அரசராகப் பணியாற்றிய வரலாறுகள் ஆகும். எனவே தான் அவர்களைச் சேக்கிழார் புகழ்கின்றார். அரசப்பணியில் நின்றாலும் தம் பக்தர் நிலையை இவர்கள் மறக்கவேயில்லை. இதன் மறுதலையாக, சமணனாக இருந்து சைவனாக மாறிய மகேந்திரன், நரசிம்மவர்மன் முதலானவர்கள் அரசர்களாக இருந்து பக்தர்களாகவும் மாறினவர்கள். என்ன இருந்தாலும் இவர்கள் தாம் அரசர்கள் என்பதை மறப்பதில்லை. இதனால் தான் பேர்லும் சேக்கிழார் இவர்களை மதிக்கவில்ல்ை என்று சொல்லத் தோன்றுகிறது. இந்தக் காரணத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் கூறத் தோன்றவில்லை. சிறுத்தொண்டர் செய்த தொண்டைப் பாராட்டும் சேக்கிழார் அவர் செய்த மாபெரும் போரை விரிவாகக் கூறவில்லை. புகழ்ச் சோழர் போரின் இறுதியில் சிவனடியார் தலையைக் கண்டு வருந்தி உயிர் நீத்ததைப் பாடும் கவிஞர் அந்தப் போர் யாருடன் நிகழ்ந்தது என்று கூறத் தொடங்கி மலையரணில் வாழ்பவனாகிய அதிகன் என்று கூறி அமைந்துவிடுகிறார். 12 பாடல்களில் அதிகனிடம் நடத்திய போரை வருணிக்கின்றார். அதுவும் ஒரு காரணம் பற்றியே என்று தோன்றுகிறது. போர்க் குழப்பத்தில் ஒவ்வொருவரையும் அடையாளங்கண்டு கொல்வது இயலாத காரியம். போர்க் களத்தில் துறவி ஒருவர் எப்படி உள்ளே வந்தார் என்பதும் புதிராகவே உள்ளது. எனவே வெட்டுண்ட தலைகளுள் புன்சடையுடைய ஒருசிவனடியார் தலையும் இருந்தது. அதனைக் கண்ட மன்னன் இந்த மாபெருங் குற்றத்திற்காகத் தீப்பாய்கின்றான். இந்தத் தலை தவறுதலாக வெட்டுண்டுவிடப் போர்க் குழப்பமே காரணம் என்பதைக் காட்டவே 12 பாடல்