பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பெரியபுராணம்- ஓர் ஆய்வு சங்கப் பாடல்கள் எதனை அறிவிக்கின்றன? 'பழையன கழிதல் புதியன புகுதல்' என்ற அடிப்படையில், தொல்காப்பியம் வகுத்த சட்டத்தைப் பிற்காலத்தில் தோன்றிய சங்கப் பாடல்கள் புறக்கணித்தன. திணையையும் அதன் துறைகளையும் வகுத்த தொல்காப்பியனார் அகத்தினை ஏழு, புறத்திணை ஏழு என வகுத்தார். அதுவே முறை என்பதைக் கூறவந்த உரையாசிரியர் கள், அகங்கை இரண்டாயினார்க்கு, புறங்கை நான்காகாதவாறு.” என்று தருக்க முறை விளக்கங்களும் தந்து போயினர். என்றாலும் புறநானூறு போன்ற தொகை நூல்களில் ஆனந்தப்பையுள்' பார்ப்பன வாகை" போன்ற துறைகள் கொளுவில் இடம் பெறுகின்றன. அதிலும் வியப்பு என்ன எனில், பார்ப்பன வாகைத் துறையைப் புதிதாக வகுத்து இலக்கணம் கூறின புறப் பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்திற்குக்கூட ஒத்துவராத புறம் 305 ஆம் பாடலைப் பார்ப்பன வாகைத் துறையைச் சேர்ந்தது என்று கொளுக் குறிக்கின்றது. இவற்றி லிருந்து ஒன்றை ஊகிக்க இடம் உண்டாகிறது. தொல்காப்பியத் திற்கும் பிற்காலத்தில் தோன்றிய புறம் போன்ற தொகை நூல் பாடல்களைத் தொல்காப்பிய இலக்கணத்துள் அடக்க முயன்ற முயற்சியின் பயனேயாகும் இவை. இதுவரைக் கூறியவற்றைக் கொண்டு கண்டால் ஒருசில முடிவுகள் எதிர் நிற்கின்றன. 1. தொல்காப்பியம் மிகவும் முன்னர்த் தோன்றிய இலக்கணம். 2. அது தோன்றப் பன்னூறு ஆண்டுகளின் முன்னரே தமிழில் உரைநடை, செய்யுள் என்ற இருவகையிலும் இலக்கியங்கள் பல்கியிருத்தல் வேண்டும். 3. அன்றியும் தொல்காப்பியனார் கூறும் எழுத்திலக்கணம் தமிழ் நெடுங்கணக்கு எழுத்து முறையில் செம்மை பெற்ற நிலையில் எழுந்ததாகும். - 4. தமிழில் எழுத்து முறை மிகவும் பயின்று இருந்தமையால் தான் இத்துணை இலக்கியங்கள் தொல்காப்பியனார் காலத்துக்கு முன்னரே இருந்தன. 5. தொல்காப்பியனார் காலத்திலேயே எழுதும் முறை நன்கு அமைந்து விட்டது என்றால் பின்னர் எழுந்த சங்கப் பாடல்கள் வாய்மொழி இலக்கியமாக அமையாமல் எழுத்திலக்கியங்களாகவே அமைந்தன என்று கொள்ள வேண்டியுள்ளது.