பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண அமைப்பு 49 I களில் போரை வருணிக்கின்றார் என்று தோன்றுகிறது. கட்டுப் பாட்டுக்குட்படாத போர்க்களத்திலும் தேவை இல்லாமல் கொலை நடைபெறக் கூடாது என்று கருதுபவர்கள் அரசராகிய பக்தர்கள். ஒருவேளை அனைவரையும் மீறி இத்தகைய தவறு கள் நடைபெற்றுவிட்டால் அதற்குத் தக்க பரிகாரம் அல்லது பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்றும் நினைப்பவர்கள் அரச ராகிய பக்தர்கள். ஆனால் பக்தர்கள் அரசராக இருப்பின் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அறியாமல் நடந்த இந்தப் பிழைக்குத் தம்மையே பலியாக இட்டுக் கொள்வார்கள். புகழ்ச் சோழரும், மனுநீதியும் பக்தர்கள் அரசராகப் பணியாற்றி யவர்கள். இதுவே பக்தர் அரசபணரியைச் செய்வதற்கும் அரசர் பக்தராக இருப்பதற்கும். இடையே உள்ள நுண்மையான வேற்றுமை. இந்த வகையிலும், அதாவது அரசர், போர்கள் என்பவற்றை அதிக மதிப்புத் தந்து பாடாமல் தம் காப்பியத்தை நடத்திச் செல்வதிலும் சேக்கிழார் புது வழி வகுக்கிறார். அரசர்கள், போர் என்பவற்றிற்குப் பெரிய இடம் தராமைக்கு மற்றோர் காரணமும் இருத்தல்கூடும் என எண்ண லாம். வீரம் என்பதற்கு ஏனையோர் தருகின்ற பொருளைச் சேக்கிழார் தரவில்லை. அவர் வீரர் என்று குறிப்பிடுவது எத் துயரத்தையும் கண்டு அஞ்சாமல் புலன்களை அடக்கிய பக்தர் களையே ஆகும். வீடும் வேண்டாம் என்று கூறுபவர்களையே விறலுடையார் என்றும் அவர்களுடைய வீரத்தை எடுத்துக் கூறுதல் இயலாத காரியம் என்றும் பேசுகிறார். அப்படியானால் போரில் எதிர் நின்று பகையை அழிப்பது அவருடைய கண்ணோட்டத்தில் உடல், மன வன்மைகளே தவிர வீரம் என்று கூறுவதற்கில்லை. இயற்பகை நாயனாரைச் 'சிவன் கழல் புனைந்த வீரர் ' 'செயற்கருஞ் செய்கை செய்த தீரன்' என்றும் இவர் குறிப்பிடுவதிலிருந்து வீரத்திற்கு இப் பெரியார் தரும் பொருளை அறிந்து கொள்ளலாம். வீரம் என்பது இவர் கருத்துப்படி இதுவானால், அரசரையும் போரையும் பாடாததில் வியப்பொன்றும் இல்லை. I 5 'சுவர்க்க நீக்கம் பாடிய மில்டனும் இதே கருத்தைக் கொண் டிருந்தான் என்று சி.எம். பெளரா கூறுகின்றார். 'உடல் வீரம் காட்ட ஏற்ற இடமான போர்ப் பந்தயங்கள், கவசம் அணிதல், என்பவற்றில் புறப்பொருள்களை நம்பிய வீர வெளிப்பாடுதான் காணப்படுகிறதாகலின் அதனை உண்மையான வீரம் என்று