பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49.2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அவர் (மில்டன்) ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லையற்ற பொறுமை, துன்பத்தை அமைதியாக ஏற்றுக்கொள்ளுதல் முதலான பண்புகளே வீர காப்பியங்கட்கு உகந்த கதைப் பொருள் என்று மில்டன் நம்பினார். அவர் (மில்டன்) வீரப் பண்புகள் என்று கருதுபவை, அதிகாரம், புகழ் என்பவற்றைச் சம்பாதிக்க உதவியாக இருப்பவை அல்ல. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவையும் நல்லொழுக்கம் முதலிய பண்புகளையும் பெற உதவுவனவே அவை என்று கருதி னார். ஆதாமின் வீழ்ச்சி, மனிதன் அடைந்த வெற்றியையோ, செயற்கருஞ் செயலையோ போலப் பிறருடைய வியப்புணர்ச்சி யைத் தூண்டாது என்றாலும், அதனைப் பாடிய மில்டனின் கவிதையை வீர காப்பியம் என்று கூறுகிறோம். அக் காப்பியம் எடுத்துக்கொண்டு பேசும் மாபெரும் பிரச்சனைகள் காரணமாகவே அவ்வாறு கூறுகிறோம். மனிதனின் நற்பண்பிற்கும் தீப்பண்பிற் கும் இடையே உள்ள போராட்டத்தை விவரிப்பதால் அது வீர காப்பியமாகும்.'" காப்பியக் கதையைத் தேர்ந்தெடுத்ததிலும் மில்டனும் சேக்கிழாரும் ஒற்றுமை உடையவர்கள் என்பது முன்னர்க் கூறப் பெற்றது. அதுவரை உலகம் முழுவதும் எதனை வீரம் என்று கருதி மரியாதை செலுத்தி வந்ததோ அதனை ஒதுக்கிவிட்டுப் பொறுமை. சகிப்புத்தன்மை, பிறர் செய்த இன்னா பொறுத்தல் தன்னலத் துறவு, பிறர்க்கு உதவுதல் என்பவையே வீரம் என்று கூறும் புதுமையிலும் இந்த இரண்டு காப்பியப் புலவர்களிடையே யும் ஒற்றுமை காணப்படுகிறது. மில்டனைப்பற்றி இவ்வாறு கூறிவரும் 'பெளரா மற்றொரு கருத்தையும் அழகாகக் கூறுகிறார். 'எந்த ஒரு சகாப்தம் விவிலியத்தை, சத்தியத்தை விரித்துக் கூறும் நூல் என்று ஏற்றுக் கொள்கிறதோ அந்த சகாப்தம்தான் மில்டன் என்ன கூறுகிறான் என்பதை உணரமுடியும். இந்தத் தொடரின் பொருள் மில்டனுக்கு மட்டுமல்லாமல் சேக்கிழாருக்கும் பொருந்தும். திருமுறைகளும் நாயன்மார்களும் சத்தியத்தை விரிப்பதற்கு வந்தவர்கள் என்று யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே சேக்கிழார் கூறும் பக்தியையும் வீரத்தையும் புரிந்துகொள்ள முடியும். எனவே பிற காப்பியங்களையும் காப்பியப் புலவர் களையும் ஆய்வதுபோலச் சேக்கிழாரை ஆய முற்படுவது பயன் அற்றதாகும். அவரைப் புரிந்துகொள்ள மேலே கூறப்பெற்ற வழியை மேற்கொண்டு புரிந்துகொண்ட பிறகே அவர் நூலை ஆயமுடியும்.