பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 9 4 பெரியபுராணம் - ஓர் ஆய்வு இல்லாமல் நடுநிலைக் கோட்பாட்டை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட ஒரு தலைவியையுடைய காப்பியம் மக்களிடைச் செல்வாக்குப் பெறுமா? என்ற சோதனையில் புறப்பட்டதுதான் சிலப்பதிகாரம். டாக்டர் சீனிச்சாமி தம் 'தமிழ் காப்பியக் கொள்கை' என்ற நூலில் 'தெய்வக் கற்பு மரபும் வீர மரபும் இவ்வாறு இரு கதைகளின் வழியே இணைகின்றன. இவ்விணைப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதே காப்பியத்தின் நிகழ்ச்சிப் பின்னல்' ' என்று கூறுகிறார். சிலப்பதிகாரத்தைப்பற்றி இவ்வாறு கூறும் சீனிச்சாமி அதே நூலில் 56, 57 ஆவது பக்கங்களில் வீர மரபுக் கவிதைகள் இந்தியா முழுவதும் தோன்றி வளர்ந்த வரலாற்றை என்.கே. சித்தாந்தாவின் கருத்துக்கிணங்கப் பேசு கிறார். மறுபடியும் 61ஆம் பக்கத்தில் 'புதிய தத்துவ போதனை மரபுகளும் பழைய தமிழிலக்கியக்கதை உரை மரபும் பிற மறக் கவிதை மரபுகளும் இணைந்தன..... பொதுவான இந்தியா முழுமைக்குமான இந்த அறிவு தேடற் பின்னணியில் இளங்கோ, சாத்தனார் போன்றவர்கள் தமிழ் மரபுக் கேற்பக் காப்பியங்களை உருவாக்கினர். ஊழ்வினை, நிலையாமை, அறஞ்செய்தல் போன்ற கருத்து மையங்களுடன் வாழ்வினை நீண்ட காலப் பரிமாணத்துடன் அமைத்துக் காட்டும் முறையில் காப்பியங்கள் அமைக்கப்பட்டன' ' என்கிறார். மேனாட்டுத் திறனாய்வின் வழி நின்று வீரப்பாடல், வாய் மொழிப் பாடல் என்ற முறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சியைக் கணித்த முனைவர் கைலாசபதி வழியைப் பின்பற்றியதால் முனைவர் சீனிச்சாமி இம் முடிவுகட்கு வருகிறார். காப்பிய வளர்ச்சி என்ற பகுதியில் இக்கருத்தை மறுத்து விரிவாகப் பேசப் பெற்றுள்ளதைக் காணலாம். இவ்வாராய்ச்சியில் மேனாட்டு நூல்களை இங்கு எடுத்துக் காட்டுவது ஒப்புநோக்கல் என்ற ஒரு கருத்துடன் மட்டுமேயாகும். ஹோமரிலிருந்து, வர்ஜில் மாறுபட்டு உடல் வீரத்தைப் போற்றுவதைவிட நடுநிலைக் கோட்பாட்டைப் போற்றும் முறையில் காப்பியம் அமைத்தார் என்று கண்டோம். வர்ஜிலைப் போலவே, இளங்கோவும் செய்த புது முயற்சியாகும் கண்ணகி படைப்பு. தமிழ்க் கற்பு மரபு முதலியன இதில் இல்லை என்று கூற வரவில்லை. ஆனால் காப்பியம் என்ற முறையில் அதில் வரும் தலைவிக்குத் தலையாயப் பண்பாகக் கவிஞர் எதனை ஏற்றிக் காண்கிறார் என்பதுதான் இங்கு வினாவாகும். கண்ணகி வாழ்க்கையின் குறிக்கோள் யாது? என்ற வினாவிற்கு விடையாக, .