பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண அமைப்பு 49.5 'எழுகென எழுந்தாய் என்செய்தனை? என அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர் கோடலும் இழந்த என்னை......... * 2 3 என்று அடிகள் கோடிட்டுக் காட்டுகிறார். 'நான் வா என்றவுடன் வந்துவிட்டாயே?’ என்று கோவலன் கேட்டதற்கு அப் பெரு மாட்டி கூறிய விடையே பின் மூன்று அடிகள். கோவலன் இன்மையின் கடமைகளுள் ஒன்றுஞ் செய்யமுடியாமல் அசேதனம் போலப் பல்லாண்டுகள் வாழ்ந்தாள். அவள் இன்ப துன்பங்களில் நடுநிலை வகிக்கும் (Stoic) சான்றோளாக வாழ்ந்ததைச் சிலம்பு பேசுகிறது. போர்ப் பாடல், இன்றேல் அகத்துறைப் பாடல், என்பவை மட்டுமே நிறைந்திருந்த தமிழிலக்கியத்தில் போர்ப் பறை கொட்டாமல், காதலுக்குப் பெரிய இடம் கொடாமல், ஒரு நடுநிலையாளை (Stoic) வைத்துக் காப்பியம் இயற்ற முடியுமா என முயன்ற முயற்சியே சிலம்பாகும். அவ்ர் அதில் பெற்ற வெற்றியே பக்தியையும் தொண்டையும் அடிப்படைப் பண்பு களாக வைத்துச் சேக்கிழார் காப்பியம் செய்யத் தூண்டியது என்று கோடலில் தவறில்லை என்று தோன்றுகிறது. நடுவுநிலைமைக் கொள்கையைத் தலைமைப் பண்பாகக் கொண்டுள்ள கண்ணகி யைத் தலைவியாக வைத்துக் காப்பியம் இயற்றி வெற்றி கண்டார் இளங்கோ என்பதால், பின்னர் வந்த பலர் அம்முறை யைக் கையாண்டு தோல்வியைத் தழுவினர் என்பதையும் காண முடிகிறது. மணிமேகலை ஆசிரியரே இம்முறையைக் கையாள முயன்று தோற்றவர்தாம். அடிப்படைப் பண்பை இலைமறை காயாக வைத்துக் காப்பிய அழகு கெடாமல் நடத்தியதால் இளங்கோ வெற்றி பெற்றார். ஆனால் இந்தப் பண்பை முந்திரிக் கொட்டைபோல் வெளியே தெரியுமாறு காட்டிக் காப்பியஞ் செய்தமையாலும், வேறு காப்பிய நயங்கள் அதிகம் இன்மை யாலும் சாத்தனார் காப்பியம் எடுபடவில்லை. சாத்தானாருக்குப் பின்னரும் சிலம்பை மனத்துள் வைத்துக் கொண்டு வளைய்ாபதி, குண்டலகேசி போன்ற காப்பியங்கள் தோன்றினாலும் ஒன்றாவது நிலைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே போலும் இந்த முயற்சியில் இறங்காமல் சூளாமணி, சிந்தாமணி ஆசிரியர்கள் பழைய காப்பிய முறையில் அரசர்கள் கதைகளையே எடுத்துக் கொண்டு பாடலாயினர். எனவே இளங்கோவிற்குப் பிறகு இம் முயற்சியில் துணிவுடன் இறங்கியவர் சேக்கிழார்தாம். அதில் அவர் பெருவெற்றி அடைந்தார் என்பதும் வெள்ளிடை மலை. மேனாட்டுக் காப்பியங்களைப் பொறுத்தமட்டில் வர்ஜிலும் தமிழ்க் காப்பியங்களைப் பொறுத்தமட்டில் இளங்கோவும் தம்தம்