பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 6 பெரியபுராணம்-ஒர் ஆய்வு முறைகளிற் புது வழி வகுத்தனர். புது வழிச் செல்வதில் தவறில்லை; மக்கள் அதனை ஏற்பார்கள் என்று தெரிந்தவுடன் பின்வந்தவர்களுள் துணிவுடைய சிலர் மில்டனைப் போலவும் சேக்கிழாரைப் போலவும் தமக்கெனத் தனி வழி வகுத்துச் சென்றனர். சேக்கிழார் புதுவழியை வகுத்துக்கொண்டு, தொண்டு என்ற பண்பைக் காப்பியப் பொருளாக்கித் தொண்டர்கள், பக்தர்கள் என்பவர்கள் தூய பக்தி மனப்பான்மையுடன் வாழ்க்கை நடத்தும் போது எப்படியெப்படி யெல்லாம் செயல்படுவார்கள் என்பதை விளக்கினார். எனவே அவருடைய காப்பியம் அனைத்துலகத்தை upih župajub Ligi III (Universal application) GlenfračarG) s japноћgi விட்டது. சைவ சமயத்தைச் சேர்ந்ததாயினும், சிவபெருமான் பெருமை பேசுவதாயினும், சைவம என்ற இடங்களில் வேறு சமயப் பெயரையும் சிவபெருமான் என்ற இடங்களில் வேறு தெய்வப் பெயர்களையும் வைத்துவிட்டால் அந்தந்த சமயத் தாரும் ஏற்றுக்கொண்டு கொண்டாடும் வகையில் ஆக்கப் பெற்ற அமைப்பை உடையது பெரியபுராணம். காப்பிய அமைப்பிலும், காப்பியப் பொருளிலும் புதுமை புகுத்தினாலும் மரபு கெடாத படிக் காப்பியத்தை அமைத்தமை அவருடைய தனிச் சிறப்பாகும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற கருத்துத் தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில் பழைய கருத்துத்தான் என்றாலும் வெறும் கொள்கையாக, நீதியாக அது பேசப்படும்வரையில் பலருடைய மனத்தையும் கவரும் என்று கூறமுடியாது. எனவே மிக உயர்ந்த இந்தக் கருத்து எல்லா மக்களிடமும் சென்று பரவ வேண்டும் என்று கருதின சேக்கிழார் இக் கருத்துக்குக் காப்பிய வடிவம் கொடுக்க முன் வந்தது ஒப்பற்ற சாதனையாகும். இக் கருத்துத் தமிழருக்கு மட்டுமல்லாமல் உலகு தழுவிய சிறப் புடையது என்பதையும் கூறவேண்டும். அதே நேரத்தில் தமிழகத் தில் குறிப்பிட்ட ஒரு சமயத்தைக் கைதுக்கி விடவேண்டும். 12ஆம் நூற்றாண்டில் தமிழர் தம் வாழ்வில் குறிக்கோளில்லாமல், வெறும் சடங்குகளில் நம்பிக்கை கொண்டு உழலுஞ் சைவர்களாக இருந்தமையின் அவர்களைத் தட்டி எழுப்புவது சேக்கிழாரின் உடனடி நோக்கமாகும்: நாளாவட்டத்தில் காப்பியத்திலுள்ள சைவம் என்பதை ஒரளவு மறந்துவிட்டு, பக்தர்கள் என்பவர்கள் மக்களுக்குத் தொண்டு செய்யப் பிறந்தவர்கள் என்ற உலகு தழுவிய எண்ணம் வளரவேண்டும். இக் கருத்தை மனத்துட் கொண்டே காப்பியம் அமைக்கப்பட்டது.