பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஒன்பதாவது சுவை தொல்காப்பியனார் கூறும் எண் சுவைகள் சுவைகள் எட்டு என்றுதான் தொல்காப்பியம் பேசுகிறது. சுவைகள் ஒன்பது என நாடக நூலார் கொண்டனர் எனப் பேராசிரியர் கூறுகிறார். தொல்காப்பியனார் கூறிய எட்டுச் ᏜᎦ☾aᏊa JéᎬ©YᎢ fTᏊᎣ JöᎢ ; 'நகையே, அழுகை, இளிவரல், மருட்கை அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப" I இவற்றுக்கு அப்டால் நடுநிலை (சாந்தம்) என்ற சுவையை ஒன்பதாவதாக நாடக நூலார் கூறியுள்ளனர். நடுவுநிலை என்ற ஒன்பதாவது சுவையைத் தொல்காப்பியனார் ஏன் ஏற்கவில்லை என்பதற்கு விளக்கங் கூறவந்த பேராசிரியர் 'அஃது உலகியல் நீங்கினார் பெற்றியாகலின், ஈண்டு உலக வழக்கினுட் சொல்லி யதிலன் என்பது' என்று கூறுவதுடன் அமையாமல், மற்று இவ் வெட்டனோடுஞ் சமநிலை கூட்டி ஒன்பது என்னாமோ நாடக நூலிற்போல எனின், அதற்கு (நடுநிலைக்கு) ஒர் விகாரம் இன்மையின் ஈண்டுக் கூறியதிலன் என்பது. அதற்கு விகாரம் உண்டு எனின் முன்னை எட்டனுள்ளும் சார்த்திக் கொள்ளப்படும்' என்கிறார். . இவ்வாறு பேராசிரியர் கூறுவதிலிருந்தே சுவை எத்தனை என்ற கருத்து வேறுபாடு அவர் காலத்திலேயே இருந்தது என்று நினைய வேண்டியுள்ளது. இது எவ்வாறாயினும் தொல்காப்பியனார் நடுவுநிலைமை என்ற சுவையைக் கூறவில்லை. காரணம் அச் சுவையைப் பிறர் அறிந்து கொள்ளக் காரணமான மெய்ப்பாடு எதுவும் நடுவு நிலமையில் வெளிப்படுதல் இன்மையின் அதனைப் பிறர் உணர முடியாது எனக் கருதி ஒதுக்கியிருத்தல் வேண்டும். நாடக நூலுள் ஏன் இதனைக் கொண்டார்கள் எனின், வேடம் புனைந்த ஒருவன் சார்ந்த நிலையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு இருப்பானே