பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 49 S யாயின் நாடகத்தைப் பார்ப்பவர் அவன் சாந்த நிலையில் உள்ளான் என்பதை வேறு மெய்ப்பாடுகள் இன்றியும் அறியலாமா கலின் இச் சுவையை அவர்கள் ஏற்றுக்கொண்டு சுவை ஒன்பது எனக் கூறினர். ஆனால் இலக்கியத்தில் வரும் கவிதைகளில் மெய்ப் பாடு புறத்தே தோன்றாத இச்சுவையை முற்றிலுமாக வருணித்தல் கடினமாகலின் தொல்காப்பியனார் இச்சுவையை விட்டுவிட்டார் என்று கோடலே நேரிதாகும். நடுவுநிலை அல்லாத சுவையே இங்கு ஒன்பதாவதாகக் கூறப்பெறுவது இங்கு ஒன்பதாவது சுவை என்று கூறப்பெற்றது நாடக நூலார் கொண்ட நடுவுநிலைமை என்ற சுவையை அன்று. தொல்காப்பியனாரோ நாடக ஆசிரியர்களோ யாரும் கூறாத சுவை ஒன்றே இங்கு ஒன்பதாவது சுவை எனக் கூறப் பெற்றுள்ளது. அப்படியானால் அதனைச் சுவை என்று எவ்வாறு கூறலாமெனில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மாபெருங் கவிஞராகிய மகாவித் வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இதனைச் சுவை என்றே கூறுகிறார். 'பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் 3 - பாடிய கவிவலவ' என்று தம் சேக்கிழார் பிள்ளைத் தமிழில் கூறுகிறார். அன்றியும் வடநாட்டாரும் இதனை ரசத்துள் ஒன்றாக்கி 'பக்திரசம்' என்றே கூறுவர். எனவேதான் பக்தி ஒன்பதாவது சுவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தி சுவையாகுமா? 'பக்தியும் ஏனைய சுவைகள் போல ஒன்றாகும் என்றால் இலக்கியங்களில் இது மிகுதியும் காணப்படுவதில்லையே?’ என்ற ஐயம் எழலாம். ஏனைய சுவைகள் போல எல்லாரிடத்தும் இச் சுவை காணப்படுவது இல்லையாகலானும், பாடும் கவிஞர்களிட மும் பெரும்பான்மையோரிடமும் இச்சுவை காணப்படாமையால் இது அருகியே காணப்படுகிறது. அப்படியானால் இச் சுவைக் கன்று தனியான மெய்ப்பாடுகள் எவையேனும் உண்டா? என்ற வினா எழும். இவ்வினாவிற்கு உண்டு என்ற உறுதியான விடை யும் கிடைக்கும். பக்திச் சுவை நிறைந்த ஒரு பாத்திரத்தைக் காப்பியப் புலவன் அறிமுகஞ் செய்யும் பொழுதேகூட அதனைப் படிப்பவர் அப்பாத்திரத்தின் இயல்பை அறிந்துகொள்ள முடியும்.