பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அம்மாதிரியான முறையில் இந்நாட்டுக் காப்பியப் புலவர்கள் பாடியதுண்டு. எனினும் இந்த ஒரே சுவையைப் பாடுகின்ற முறை யில் அவர்களுள் பெருவேற்றுமையைக் காணமுடிகிறது. இராம, இலக்குவர்களைத் துரத்தே கண்டு அவர்கள் யார் என்று அறியாத நிலையில் அனுமன், "துன்பினைத் துடைத்து மாயத் தொல்வினை தன்னை நீக்கித் தென்புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோ தாம்? என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவில் காதல்; அன்பினுக்கு அவதி இல்லை, அடைவென்கொல்? அறிதல் தேற்றேன் 4 என்று பேசுகிறான். இராம இலக்குவர்களை முதன் முறை கண்ட சுக்கிரீவன், - '........... இவர்கின்ற காதல் ஒதக் கனைகடல் கரைநின்று ஏறா, கண் இணைகளிப்ப நோக்கி அனகனைக் குறுகினான்........... * 5 என்று கம்பன் பேசுகிறான். இராமனைக் கண்ட குகன், பார்குலாம் செல்வ! நின்னை இங்கனம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித் தீர்கிலேன்; ஆனது ஐய! செய்குவன் அடிமை என்றான்.'" என்று கம்பன் பாடுகிறான். இவருள் கங்கை வேடனாகிய குகன் அன்பே வடிவானவன்; அனுமனோ அறிவுக் கடலில் துளையமாடுபவன். இவர்கள் இருவரும் இராமனிடம் கொண்ட பக்தி அளவிடற்பாலதன்று. என்றாலும் கவிச் சக்ரவர்த்தியின் பாடல்கள் ஒரு பக்தனைப் படம் பிடித்துக் காட்டுவனவாக இல்லை. காரணம் அறிவின் துணைகொண்டு. உபநிடத அடிப்படையில் இறையிலக்கணம் வகுக்கின்ற முறையில் கம்பநாடன் பக்திக்கு இடம் தருகின்றான். ஆதலால் சேக்கிழார் காப்பியம் போன்று பக்திக்குரிய இடத்தைத் தரவில்லை என்பதிலும் வியப்பில்லை. -