பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 、359 சங்க இலக்கியப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்கள் அல்ல இத்துணை விரிவாக இதுபற்றிக் கூறுவதற்குரிய காரணம் ஒன்றுண்டு. அண்மைக் காலத்தில் இலக்கிய ஆய்வு செய்து நூல்கள் எழுதின டாக்டர் கைலாசபதி, டாக்டர் து. சீனிச்சாமி போன்ற அறிஞர்கள் புறநானூறு போன்ற தொகைப் பாடல் களை வாய்மொழி இலக்கியம் என்று முடிவு கட்டியுள்ளனர். அக் கூற்றின் பொருத்தமின்மையைக் காட்டவே இது விரித்துரைக்கப் பெற்றது, 'தமிழில் வீரப்பாடல்கள்' ' என்ற தம் நூலில் முனைவர் கைலாசபதி புறப் பாடல்களும் பத்துப்பாட்டில் வரும் பல பாடல்களும் வாய்மொழி இலக்கியமாகவே தோன்றின (Oral Poetry) என்று வாதிடுகிறார். கெல்டிக் மரபுகள் (Celtic Traditions) ஐஸ்லாந்து நாட்டின் இலக்கிய மரபுகள் (Icelandic Sagar), 3Gorčič, Lori joir(Greek Traditions) (upgalur Labouffoop ஆய்ந்த பல்வேறு திறனாய்வாளர்களின் கருத்துக்களைக் கண்டதும் கைலாசபதி தமிழ்க் கவிதைகளில் இந்தச் சாயல் இருப்பதாக உணர்கிறார். பதிற்றுப்பத்தைப் பற்றிக் கூறவந்த ஆசிரியர் 'இன்று கிடைத் துள்ள எண்பது பாடல்களின் இடையே காணப்பெறும் ஒருமை, ஒற்றுமை வியப்பை உண்டாக்குவதுடன், இந்த எண்பது பாடல் களும் எட்டு வெவ்வேறான ஆசிரியர்கள் படைத்தவைதாமா என்பதைக்கூடச் சில இக்காலத்திறனாய்வாளர் ஐயுறுகின்றனர். நடையை வைத்துக் கொண்டு ஒரே ஆசிரியரே இந்த எண்பது பாடல்களையும் இயற்றியிருக்கக்கூடும் என்றும் அறிஞர் சிலர் கருதுகின்றனர். இந்த நூலில் பின்னர் ஆராயப்படும் முறையில் வாய்மொழிப் பாடல்கள் என்பவற்றிற்கு ஆசிரியர் யார் என்று கூறுவதும் குழப்பம் தரும். பாணர்கள் பிறந்தது முதல் பயின்று வரும் முறையில் மரபை அடிப்படையாக வைத்தே வாய் மொழி இலக்கியத்தை இயற்றுகின்றனர். வாய் மொழிப் பாடலில் தனி ஒருவருடைய நடை என்பது முக்கியமில்லாத ஒன்றாகும். இந் நிலையில் பதிற்றுப்பத்துப் பாடல்கள் வாய் மொழி இலக்கியம் என்தை அறியாமல் இவற்றை இயற்றியவர் யார் என்று ஆராயப்புகுவதும் சரியன்று' 'என்று கூறிச் செல்கிறார். 'பதிற்றுப்பத்துப் பதிகங்கள் சேர மரபின் சரிதம் புகல்கின்றது என்று கூறும் இவர் பதிற்றுப்பத்துப் பாடல்கள் வாய்மொழி இலக்கியம் என்று துணிவது விந்தையானதேயாகும். இக் கருத்தை வலியுறுத்தும் வகையில் ஆசிரியர் மேலும் தொடர் வதைக் கவனிக்கவேண்டும். 25