பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 01 அப்பர் பற்றிய மூன்று பாடல்கள் விளக்கம் இதன் எதிராகப் பக்தர் ஒருவரைச் சேக்கிழார் படம் பிடித்துக் காட்டுவதைக் காணலாம். ‘தூய வெண்ணிறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் - பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே ! 'கையுந்தலைமிசை புனை அஞ்சலியன: கண்ணும் பொழிமழை ஒழியாதே பெய்யுந்தகையன: கரணங்களும் உடன் உருகும் பரிவின; பேறெய்தும் மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரும்; மின்தாழ் சடையொடு நின்றாடும் ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால் ' 'சிந்தை இடையறா அன்பும், திருமேனிதனில் அசைவும், கந்தை மிகையாம் கருத்தும், கைஉழவாரப் படையும், வந்திழி கண்ணிர்மழையும் வடிவிற் பொலிதிருநீறும், அந்தமிலாத் திருவேடத்து அரசும் எதிர்வந்தனைய' இங்குக் காட்டப் பெற்ற மூன்று பாடல்களும் ஒரே பக்தரை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வருணிக்கின்ற பாடல்களாகும். முதலாவது திருப்பாதிரிப்புலியூரில் நாவரசர் நடந்து செல்லும் காட்சி. இரண்டாவது அம்பலவாணனை அவர் வணங்கும் காட்சி. மூன்றாவது திருஞானசம்பந்தரைக் காண அப்பெரியார் சீர்காழியில் நடந்து வருகின்ற காட்சி. முதல் இரண்டு பாடல் களும் அவருடைய நடுவயதுக் காட்சி. இப்பாடல்களை வாய்விட்டுப் பாடும்பொழுது தோன்றும் உணர்ச்சியை என்னென்பது? பாடற் பொருளை முழுவதுமாக அறியவேண்டும் என்ற இன்றியமை யாமைகூட இல்லை. உள்ளத்துறவும், உயிர்கண்மாட்டு அன்பும், சம திருஷ்டியும் முதற்பாடலில் வெளிப்படுகின்றன. பாடலின் முதலடி வருபவரின் புறத்தோற்றத்தைக் காட்டுகிறது. விபூதியும் உருத்திராக்கமும் அந்த உடம்பை அணி செய்கின்றனவாம். இது ஒரு குறிப்பிட்ட சமயச் சின்னம் என்பதால் இவ்வடியை விட்டுவிட்டே பாடலைக் காணலாம். நைந்து உருகிப் பாய்வ