பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 02 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தைப் போலக் கண்ணிர் ஊற்றெடுத்து வருகிறது. எதனால் இந்தக் கண்ணிர்: அன்பு நிறைவதால் கண்ணிர் வருகிறது. 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும் " இக்குறட்பா அன்பின் வெளிப்பாடு (மெய்ப்பாடு) கண்ணிர் என்று கூறுகிறது. கடலில் கல்லுடன் போடப்பட்டாலும் அவர் பிழைத்து வந்து விட்டதனால் ஏற்பட்ட மகிழ்ச்சிக் கண்ணிர் என்று யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டு விடுவார்களோ என்று கவிஞர் 'அன்புநீர் பொழிகண்' என்று விளக்கம் தருகிறார். அப்படியானால் இந்த அன்பை இறைவனிடம் கொண்ட அன்பு என்று கூறுவதுதானே பொருத்தம். அதைவிட்டு உயிர்கள் மாட்டுக் கொண்ட அன்பு என்று ஏன் கூறவேண்டும்? என்ற வினா எழுமேயானால் பாடலின் இரண்டாவது அடியின் முற்பகுதி அதற்கு விடை தருகிறது. 'நாயகன் சேவடி தைவரு சிந்தை' என்ப தால் அகமணமாகிய சித்தம் (Sub-conscious mind) இறைவன் திருவடிகளையே வருடிக் கொண்டிருக்கிறது என்கிறார் ஆசிரியர். அகமனம் இறைவனிடம் தங்கிவிட்டது என்றால் பொருள் என்ன? இவருடைய தூண்டுதல் இல்லாமலும் அகமனம் இறையருளில் திளைக்கின்றது. எனவே புறமணத்தில் தோன்றும் அன்பை இறையன்பு என்று பொருள் கொள்வது பொருத்தமற்ற தாக ஆகிவிடும். உயிர்கள் மாட்டு அன்பு என்று ஏன் பொருள் கொள்ள வேண்டும்? ஓர் அரசன், அவனுடைய அரசியலில் செல்வாக் குடைய குறிப்பிட்ட சமயத்தார் ஆகிய அனைவரும் சேர்ந்து இவருக்குப் பெருந்தீங்கை இழைத்தனர். இழைத்தவர்கள் யார்? நேற்றுவரை இவரிடம் அன்பு பூண்டு தம் சமயத்தில் பெரிய பதவியை இவருக்குத் தந்து போற்றினவர்களாவார்கள். அத்தகைய பழைய நண்பர்கள் இத்தகைய தீங்கு செய்யத் துணிந்தால் அவர்கள் மேல்மட்டும் அல்லாமல், மனித குலம் முழுவதன் மேலும் ஒருவர் வெறுப்புக் கொண்டால் அதில் தவறு கூறமுடியாது. அப்படியிருந்தும் நாவரசர் அவர்கள் மாட்டுக் காழ்ப்போ, வெறுப்போ, சினமோ கொள்ளவில்லை. இவை இல்லாமல் ஒருவர் எப்படி இருக்கமுடியும்? மனத்தில் பிற உயிர் களிடம் அன்பு என்பது நிறைந்துவிடுமானால் அன்பு செய்யப் பட்டவர் எத்துணைத் தீமை செய்தாலும் அது பெரியதாகப் படுவதில்லை. அவர்கள் அறியாமையால் செய்கிறார்கள். எனவே மன்னிப்பதற்கு உரியவர்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். இதனைக் கூறவந்த கவிஞர் குறிப்பாக 'அன்பு நீர்