பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 0 ? பொழிகண் என்று கூறிவிடுகிறார். 'பதிகச் செஞ்சொல் மேய செவ்வாய்' என்றதனால் வாய் இறைவனைப் பாடும் பணியில் ஈடுபட்டுள்ளதை அறிவிக்கின்றார். பதிகச் செஞ்சொல் பாடும் வாய் என்று கூறாமல் மேய என்று கூறுவதும், நோக்கற்குரிய தாகும். 'மேய' என்றே சொல் மேவிய' என்ற சொல்லின் குறுக்க மாகும். மேவிய' என்றால் 'பொருந்திய' என்று பொருள்படும். பதிகம் அவர் முயன்று பாடி வெளிவரவில்லை. அது தானாகவே வெளிப்பட்டு அவர் வாயில் பொருந்தியுள்ளது என்று கூறுகிறார் கவிஞர். அதுவும் சாதாரணப் பாடல்கள் அல்ல 'செஞ்சொல்' என்றமையின் கற்பவர்களைக் கைதுக்கிவிடும் செம்மை நலஞ் சான்ற பாடல்கள் என்ற பொருள் தருவதற்காகவே பதிகச் செஞ்சொல்' என்கிறார். இவ்வாறு காப்பியப் புலவர் கூறுவதன் உட்பொருளை அறிய உதவுவது வேதந் தமிழ் செய்த மாறன் சடகோபரின் பாடல் களாகும். தம்முடைய பாடல்களைப்பற்றிக் கூறவந்த அப் பெருமகனார் 'என் வாயைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு பெருமான் தன்னைத் தானே பாடிக் கொள்கிறான்' என்ற கருத்தில், 'என் இநஞ்சத்து உள்ளிருந்து இங்கு 了夏 இருந்தமிழ் நூல் இவை மொழிந்து

  • % 根 始 多海 & 够 铬 8 峰 峰 * 姆 8 始 够 é * 邸

தானே யான் என்பானாகித் தன்னைத்தானே துதித்து..... ' 'பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி.....' என்ற பகுதிகளில் பாடிச் செல்வதைக் காணமுடிகின்றது. மேலும் திருஞான சம்பந்தரும், தம் பாடலை 'எனதுரை தனதுரையாம்...' என்று கூறிச் செல்கிறார். இவற்றின் நுணுக்கத்தைக் கூறவந்த காப்பியப் புலவர் பதிகச் செஞ்சொல் மேவிய செவ்வாய்' என்று கூறுவது அறிந்து இன்புறத் தக்கது. பக்திச் சுவைபாடுவது எளிதன்று பக்திச் சுவை பாடுவது என்பது அத்துணை எளிதான செய லன்று என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. நான்கு அடிகள்; முதலடி புறத்தோற்ற வருணனை, இரண்டு மூன்றாம் அடிகளில் அகமணம் பேசப்படுவதுடன் அதன் விளைவாக வெளிப்படும் 34